14
June, 2026

A News 365Times Venture

14
Sunday
June, 2026

A News 365Times Venture

"பாஜக – அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்" – தமாகா தலைவர் ஜி.கே. வாசன் சொல்லும் காரணம் என்ன?

Date:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்திருக்கிறார்.

சென்னை எழும்பூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஜி.கே வாசன்

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஜி.கே. வாசன், “மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, மாநிலத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விலகுகிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கி 12 ஆண்டுகள் ஆகியும் எங்களுடைய நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை. சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற முடியவில்லை.

எங்களுடைய கூட்டணியும் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. தேர்தல் நேரங்களில் கூட்டணி அவசியம். ஆனால், கூட்டணி அரசியலில் இயக்கத்தின் வளர்ச்சி குறைவதாக நிர்வாகிகள் கருதுகிறார்கள்.

தனித்தன்மையோடு கட்சி செயல்பட வேண்டும் என விரும்புகிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் வரும் வரை எங்கள் கட்சி தனித்தன்மையோடு செயல்பட்டு மீண்டும் அடித்தளத்தைப் பலப்படுத்த வேண்டும்.

ஜி.கே. வாசன்
ஜி.கே வாசன்

இனி தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணி. பாஜக மற்றும் அதிமுகவுடன் எந்தச் சண்டையும் தற்போது கிடையாது. கூட்டணிக் கட்சிகளுடன் எந்த மனக்குமுறலும் இல்லை, கூட்டணியில் இருந்து நட்பு சக்தியாகவே விலகுகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அதிமுக – தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது ஜிகே வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் ?

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஜிகே வாசன் தலைமையில்...

"கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன்"- அதிமுகவில் இருந்து விலகிய கௌதமி

நடிகை கெளதமி அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர்...

சபரிமலை தங்கக் கொள்ளை: குற்றம்சாட்டப்பட்ட நிறுவனத்தின் வக்கீல் அரசு வழக்கறிஞரா? எதிர்ப்பால் ராஜிநாமா

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலகர்கள் சிலையில் 2019-ம் ஆண்டு தங்க...