16
June, 2026

A News 365Times Venture

16
Tuesday
June, 2026

A News 365Times Venture

தஞ்சாவூர்: 'மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம்? மகளிர் அணிக்கு வாட்ச் பரிசு' – புது ரூட்டில் திமுக தலைமை

Date:

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக தலைமை கட்சிக்குள் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார் என்கிறார்கள். தேர்தல் தோல்விக்கான காரணத்தை அறிய கள ஆய்வு குழுவை நியமித்தார் ஸ்டாலின்.

இதில் தோல்விக்கான காரணம் என்னவென்று தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் ஆலோசித்து கள ஆய்வு அறிக்கையை அக்குழுவினர் சமர்பித்தனர்.

மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் வாக்களிக்கவில்லை, விஜய் அலையைக் கவனிக்கத் தவறியது உள்ளிட்டவை தோல்விக்கான காரணங்களாகச் சொல்லப்பட்டுள்ளது என்கிறார்கள்.

வைத்திலிங்கம்

இதே போல் கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலும் தோல்விக்கான காரணிகளில் ஒன்று. கள ஆய்வின் போதே இது பல தொகுதிகளில் வெடித்தது குறிப்பிடத்தக்கது. திமுக-வின் கோட்டைகளாக அறியப்பட்ட தஞ்சாவூர், கும்பகோணம் தொகுதிகளில் தோற்றதற்கு கோஷ்டி பூசல், உள்ளடி வேலை போன்றவை காரணம் என்று திமுக விசுவாசிகள் கூறி வருகின்றனர்.

தோல்வியால் துவண்டிருந்த திமுக-வினரை தலைமை எடுத்து வரும் முன்னெடுப்புகள் உற்சாகத்தைக் கொடுத்துள்ளன. அதிமுக-வில் பல மாவட்டங்களில் இருப்பது போல் இரண்டு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமனம் செய்வதற்கான முயற்சியில் இருக்கிறார் ஸ்டாலின் என திமுக-வினரால் பரவலாகப் பேசப்படுகிறது.

திமுக-வில் கட்சி ரீதியாக தற்போது சுமார் 70 மாவட்டங்கள் உள்ள நிலையில் நூறுக்கு மேல் உயர்த்துவதற்கு ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். இதில் வைத்திலிங்கத்திற்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைப்பதற்கு வாய்ப்புள்ளதாகப் பேசப்படுகிறது.

இது குறித்து விபரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம், ”திமுக எப்போதும் தோல்வியைக் கண்டு அஞ்சியதில்லை. அந்த வகையில் தற்போதைய தேர்தல் தோல்விகள் கொடுத்த பாடத்தை உரமாக்கி அடுத்த பாய்ச்சலுக்கு கட்சியினரைத் தயார் படுத்தி வருகிறார் தலைவர் ஸ்டாலின்.

கட்சியில் இளைஞர்கள், மகளிருக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளார்கள்.

முரசொலி
முரசொலி

மாவட்ட, ஒன்றிய அளவிலான மகளிர் அணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் 3,000 மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் ஸ்டாலின், கனிமொழி இருவரும் பேசியுள்ளனர். இதில் கலந்து கொண்ட மகளிர் அணி நிர்வாகி ஒவ்வொருவருக்கும் வாட்ச் பரிசளித்துள்ளது தலைமை.

இதைவிட தங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் மெய்சிலிர்த்துள்ளனர் மகளிர் அணியினர். அடுத்த கட்டமாக கட்சிப் பணிகளில் சோர்வாக உள்ள நிர்வாகிகள், ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பவர்கள், கட்சியால் ஆதாயம் அடைத்தும் கட்சி வளர்சிக்காக செலவு செய்யாதவர்கள் மீது சாட்டையைச் சுழற்ற தயாராகி விட்டார் ஸ்டாலின்.

இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்பதை இப்போதைக்கு தலைமை அஸ்திரமாக எடுத்துள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற எளிதாத ஜெயிக்க கூடிய தொகுதிகளில் கோட்டை விட்டதற்கான காரணத்தை முன் வைத்து தலைமை இங்கு சில மாற்றங்களை நிகழ்த்த முடிவெடுத்துள்ளது.

தேர்தலுக்கு முன்பு திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். அதிமுகவில் சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கத்திற்கு தஞ்சாவூர், ஒரத்தநாடு தொகுதிகளை உள்ளடக்கி மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.

துரை.சந்திரசேகரன், முரசொலி
துரை.சந்திரசேகரன், முரசொலி

தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளை உள்ளடக்கியது தற்போது மத்திய மாவட்டமாக உள்ளது. இதன் மாவட்ட செயலாளராக சீனியரான எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் இருக்கிறார். இவர் மீது தலைமை அதிருப்தியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

கட்சிக்கும், கட்சியினருக்கும் பெரிதாக செலவு செய்ய மாட்டார் என்கிற கருத்து இவர் மீது நிலவுவது குறிப்பிடத்தக்கது. சண்.இராமநாதனுக்கு எதிரான உள்ளடி வேலைகள் தெரிந்தும் தலைமைக்குக் கவனப்படுத்தவில்லை எனத் தலைமை கருதுகிறது. கட்சிக்கு விசுவாசமாக இருப்பது இவருக்கான இருப்பைத் தக்க வைக்கும் என்கிறார்கள். இவருடைய ஆதரவாளராக வலம் வரும் தஞ்சாவூர் எம்.பி முரசொலி ஆக்டீவாக இருக்கிறார். மாவட்டச் செயலாளர் பட்டியலில் இவரது பெயரும் அடிபடுகிறது.

அதிருப்தியில் இருக்கும் அதிமுக-வைச் சேர்ந்தவர்களை திமுக-வுக்கு வலை வீசி வருகிறாராம் முரசொலி. ‘தலைமை தனக்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளது. நீங்கள் வாருங்கள். நான் உங்களைப் பார்த்துகொள்கிறேன்’ என்கிறாராம். முன்பை விட சுறுசுறுப்பாக இருக்கும் வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதி மக்களுக்கு நன்றி கூறும் போது, விஜய் தலைமையிலான ஆட்சி ஒரு மாயை. விரைவில் இந்த மாயை மறைந்து சூரியன் உதிக்கும் திமுக ஆட்சி அமையும் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்றாராம்.

சண்.இராமநாதன்

களத்தில் வேலை செய்வதில் வைத்திலிங்கம் கில்லி. திருவையாறு, பாபநாசம் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளராக முரசொலியை நியமித்து விட்டு, மாவட்டத்தின் தலைநகரான தஞ்சாவூர், ஒரத்தநாடு மாவட்டச் செயலாளராக வைத்தியை அமர்த்தவும் முடிவெடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

முரசொலியும் தலைநகரை மையமாக வைத்து அரசியல் செய்யவே விரும்புகிரார். இதில் எது நடக்கும் என்று தெரியவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கிறோம், ஆளும் கட்சிக்கு எதிரானவற்றில் அழுத்தமாகவும், கட்சிப் பணிகளில் ஆக்டீவாகவும் பசைக்கு தலைமையை எதிர்பார்க்காமல் இருப்பவர்களே மாவட்டச் செயலாளர் பதவியில் நியமிக்கபடுவார்கள் எனப் பேசப்படுவதாகத் தெரிவித்தனர். மற்றும் சிலரோ, இடைத்தேர்தலுக்குப் பிறகே இது போன்ற மாற்றங்கள் நிகழும்” என்கின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?'- முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்...

கோயிலில் வைத்து மருத்துவம்; பூட்டி கிடக்கும் சுகாதார நிலையம் – அலட்சியத்தில் கூத்தாநல்லூர் நகராட்சி!

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் சார்பதிவாளர் அலுவலகம் அருகே பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையின்...

`மண்ணை மலடாக்க துடிக்கிறார்கள்!' – ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகக் கொதிக்கும் கடலூர் மக்கள்

கடல் இயற்கை வளங்களை அழிக்கும் திட்டம்கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை பகுதியில் இருந்து...