16
April, 2026

A News 365Times Venture

16
Thursday
April, 2026

A News 365Times Venture

பதிவாளர் அலுவலக கழிவறையில் ரூ.3 லட்சம்; லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையில் பறிமுதல்; நடந்தது என்ன?

Date:

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நஞ்சியம்பாளையம் பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உமா மகேஷ்வரி என்பவர் சார் பதிவாளராகப் பணியாற்றி வருகிறார்.

இந்த அலுவலகத்தில் முறைகேடாகப் பத்திரப் பதிவு நடைபெறுவதாகவும், பத்திரப் பதிவுக்கு இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் பெறுவதாகவும் புகார்கள் எழுந்து வந்தன.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு தாராபுரத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிருடன் இருக்கும் நிலையில், அவருக்குச் சொந்தமான நிலத்தை வேறொருவர் பெயரில் பத்திரப் பதிவு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு போலீஸார் தாராபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனையிட வந்தபோது, அதை முன்கூட்டியே அறிந்த சார் பதிவாளர் உமா மகேஷ்வரி உடல்நிலை சரியில்லை என்று பாதியிலேயே விடுப்பு எடுத்த சம்பவமும் நடைபெற்றது.

லஞ்சம்

இந்நிலையில், தாராபுரம் சார் பதிவாளர் அலுவலகத்துக்குத் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், ஆய்வாளர் சசிலேகா தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட போலீஸார் மாலை 3 மணி அளவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கழிவறையிலிருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதுபோல, அலங்கியம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1.50 லட்சமும், சிவசுப்பிரமணி என்ற பத்திர எழுத்தரின் உதவியாளர் நடராஜிடமிருந்து ரூ.3000 என மொத்தம் கணக்கில் வராத ரூ. 4.53-லட்சத்தை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

உமா மகேஷ்வரி

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், “தாராபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் கழிவறையிலிருந்து கணக்கில் வராத ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.4.53 லட்சத்தைப் பறிமுதல் செய்துள்ளோம்.

இதுதொடர்பாக சார் பதிவாளர் உமா மகேஷ்வரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பத்திர எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்கள் சிலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“ `நற்பேறு' – இந்த வாய்ப்பை நழுவவிடக் கூடாது" – மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து பிரதமர் மோடி

நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அரசியல் மையங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கும்...

"என் சொந்தக் காசு 500 ரூபா போச்சு" – திமுக தேர்தல் விளம்பரத்தில் நடித்தது குறித்து 'டெலிபோன்' ராஜ்

'அடேங்கப்பா, நிறைய பண்ணிருக்கீங்களே, இந்த ஆட்சியின் சாதனைகளைச் சொல்ல சுவரே பத்தாது...