25
April, 2025

A News 365Times Venture

25
Friday
April, 2025

A News 365Times Venture

`படிப்புக்கேத்த வேலை கிடைச்சா தன்னம்பிக்கையோட வாழ்வேன்..!' – விழுப்புரம் இளைஞர் ஜெயக்குமார்

Date:

‘என் சின்னஞ் சிறிய மகளுக்கு மூளையில் கட்டி; பண உதவி வேண்டும்’

‘வாழ்வாதாரத்துக்கு டிபன் கடை வைக்க தள்ளுவண்டி வேண்டும்’

‘குடல் பொசுங்கிக் கிடக்கும் கணவரையும் குடும்பத்தையும் காப்பாற்ற உதவுங்கள்’

‘ரயில் விபத்தில் கால்களை இழந்துவிட்டேன்; செயற்கை கால்கள் பொருத்தவும் வாழ்வாதாரத்துக்கும் உதவுங்கள்’

…………………….. இப்படி தங்கள் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட பிரச்னைகளை விகடனிடம் பகிர்ந்து, அதன் வழியே விகடன் வாசகர்களின் உதவியைப் பெற்று, வாழ்வாதாரத்தை மீட்டுக்கொண்டவர்கள் பலர்.

இந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்னால் விகடன் வாசகர்களின் உதவியாலும் செயற்கைக்கால் பொருத்திக்கொண்ட விழுப்புரத்தைச் சேர்ந்த விஜயகுமார் நமக்கு போன் செய்திருந்தார். போன் செய்ததற்கான காரணத்தை சொல்வதற்கு முன்னால், விஜயகுமார் பற்றி சில வரிகள்…

விஜயகுமார் (தற்போது)

2021 ஏப்ரல் மாதம். உலகமே கொரோனாவால் அஞ்சிக்கொண்டிருந்த கொண்டிருந்த நேரத்தில்தான் விஜயகுமாரின் அமைதியான வாழ்க்கையை புரட்டிப்போட்டது அந்த சம்பவம்.

விஜயகுமார் விழுப்புரத்தை அடுத்த தலைக்காணி குப்பத்தைச் சேர்ந்தவர். அப்பா விவசாயி. அம்மா பால்வாடி ஸ்கூல் டீச்சர். டிப்ளோமா இன் எலெக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படித்து முடித்தவுடன், ஆஸ்துமாவுடன் போராடிக்கொண்டிருந்த அப்பாவை வீட்டில் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு, தான் வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார். இரண்டு வருடங்கள் கழித்து சொந்த ஊரில் காய்கறிக்கடை திறந்திருக்கிறார். விஜயகுமாரின் வலது கால் மீது தவறுதலாக மண்வெட்டி விழுந்து காயம் ஏற்படுத்த, சின்னக் காயம்தானே என டிடி இன்ஜெக்‌ஷன் போடாமல் விட்டிருக்கிறார். விளைவு, ஐந்து நாள்களில் காயம் செப்டிக் ஆகிவிட்டது. பதறியடித்து மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். செப்டிக் ஆகி கறுப்பான தசைப்பகுதியை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியிருக்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், அதன் பிறகும் கால் வீங்கி வலியெடுத்துக்கொண்டே இருக்க, மறுபடியும் மருத்துவமனை சென்றிருக்கிறார். அங்கு, விஜயகுமார் காலில் கறுப்புப் பூஞ்சைத்தொற்று ஏற்பட்டிருப்பதைக் கண்டுபிடித்த மருத்துவர்கள், விஜயகுமாரின் வலது காலை அறுவை சிகிச்சை செய்து நீக்கி விட்டார்கள். இந்த சிகிச்சைக்கான செலவுக்காக விஜயகுமாரின் அப்பா, தன்னிடம் இருந்த நிலத்தையும் விற்றிருக்கிறார். அப்படியும் செயற்கைக்காலுக்கான தொகை கிடைக்காததால், விஜயகுமாரின் அப்பா மறுபடியும் வேலைக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார். இந்த நேரத்தில்தான், ‘குடும்பத்தை காப்பாத்த வேண்டிய நான் ஒரு கால் இல்லாம வீட்டுக்குள்ளேயே கிடக்கிறேன். என் காலை மட்டுமல்ல, வாழ்க்கையையும் பறிச்சிடுச்சு கறுப்புப் பூஞ்சை’ என்று தன் நிலைமையைக் கண்ணீருடன் விகடனிடம் பகிர்ந்திருந்தார் விஜயகுமார். அவருடைய பேட்டியை அக்டோபர் 2012-ல் விகடன் டிஜிட்டலில் பதிவேற்றினோம். அதனுடன், விஜயகுமாரின் அம்மா பேசியிருந்த, தன் மகனுக்கு உதவி செய்யக்கோரிய வீடியோவையும் இணைத்திருந்தோம். மேலும், ‘விஜயகுமாருக்கு உதவ விரும்புபவர்கள் help@vikatan.com என்ற மின்னஞ்சலைத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்’ என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

அதன் பலனாக விகடன் வாசகர்கள் சிலர் விஜயகுமாருக்கு பண உதவி செய்தனர். அவையனைத்தும் விஜயகுமாரின் வங்கிக் கணக்குக்குச் சென்றது. 2022 ஏப்ரல் மாதம், விகடனுக்கு போன் செய்த விஜயகுமார், ‘எனக்குச் செயற்கைக்கால் பொருத்தியாச்சு. நான் இப்போ நடக்க ஆரம்பிச்சிட்டேன். விகடன் வாசகர்கள் செஞ்ச பண உதவியாலதான் நான் மறுபடியும் நடக்க ஆரம்பிச்சிருக்கேன். அவங்க கொடுத்த ஒரு லட்சத்து மூவாயிரம் ரூபாயை முன்பணமா கொடுத்துதான் செயற்கைக்கால் பொருத்திக்கிட்டேன். முகம்கூட தெரியாத அந்த நல்ல உள்ளங்களுக்கும், விகடனுக்கும் நானும் என் குடும்பமும் வாழ்நாள் முழுக்க நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கோம்’ என்று ஆனந்தக்கண்ணீர் விட்டார். அந்த நேரத்தில் நம் நிலைமையும் அதுதான்.

விஜயகுமார்

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு நம்மை தொடர்பு கொண்ட விஜயகுமார், ”நான் நல்லா இருக்கேன் மேம். விகடன்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா” என்று அன்பை பகிர்ந்துகொண்டவர், தொடர்ந்து பேசினார். ”இனி நடக்கவே முடியாதுன்னு உடைஞ்சுபோய் உட்கார்ந்திருந்தேன். ஆனா, விகடன் வாசகர்கள் என்னை நடக்க வெச்சாங்க. அதனாலதான் அவங்க கிட்டயே இந்த உதவியையும் கேக்கலாம்னு உங்களுக்கு போன் செஞ்சேன். நான் டிப்ளோமா இன் எலெக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படிச்சிருக்கேன். என்னோட ஸ்கில்லை வளர்த்துக்கணும்கிறதுக்காக, சமீபத்துல சென்னைக்கு வந்து கிராபிக் டிசைன்ஸ்கூட கத்துக்கிட்டேன். கொஞ்சம் தாங்கித் தாங்கி நடந்தாலும் தன்னம்பிக்கையோட வாழ்ந்துட்டிருக்கேன். என் படிப்புக்கேத்த ஒரு வேலை கிடைச்சா இன்னும் தன்னம்பிக்கையோட வாழ்வேன்” என்கிறார் விஜயகுமார்.

நினைத்தது நிறைவேறும்..!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“காப்பாற்றியவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்தான்.. பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது'' – மெகபூபா முஃப்தி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள்...

Indus River: “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது ஓகே; நீரை எங்கு தேக்குவீர்கள்?'' -ஒவைசி கேள்வி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது...

Pahalgam: சோதனையின் போது வெடித்த தீவிரவாதிகளின் வீடுகள்; `நாங்கள் காரணம் இல்லை' கூறும் அதிகாரிகள்!

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புள்ள இரண்டு தீவிரவாதிகளின் வீடு இடிந்து...

`சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் விடுவிப்பும் ரத்து' – உயர் நீதிமன்றம் அதிரடி

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை...