10
November, 2026

A News 365Times Venture

10
Tuesday
November, 2026

A News 365Times Venture

"நான் பேசியது தவறாகப் புரிந்துக்கொள்ளப்பட்டது" – சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

Date:

தமிழ்நாட்டில் தீபாவளி அன்று மட்டும் 12 கொலைகள் அரேங்கேறிய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து, “பண்டிகைக் காலங்களில் இதெல்லாம் புதிதல்ல… எதிர்க்கட்சிகள் தான் வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள்” என்று அமைச்சர் ராஜ்மோகன் பேசியிருந்தார்.

ராஜ்மோகனின் இந்தப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பி இருந்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்மோகனிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அமைச்சர் ராஜ்மோகன்

அதற்குப் பதிலளித்த அவர், “நான் பேசியது தவறாகப் புரிந்துக்கொள்ளப்பட்டது. கடந்த காலங்களில் கொலைகள் நடந்தது என்பதற்காக நாங்களும் அப்படியே கண்டுகொள்ளாமல் விடமாட்டோம்.

கடந்த காலங்களில் நடந்த குற்றங்களைக் கலைவதற்காகவும் தான் நாங்கள் வேலை செய்துக்கொடிருக்கிறோம். முன்பை விட காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறோம். கடந்த காலத்தைச் சொல்லி ஒப்பிட்டுப் பேச வரவில்லை. காவல்துறை என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ்? “ஆட்சிக்கும், கட்சிக்கும் களங்கம் விளைவிக்கும்" – ஜோதிமணி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது...

"பண்டிகை காலம் என்றால் கொலைகள் நடப்பது சகஜம் என்று நியாயப்படுத்தலாமா?"- ராஜ்மோகனுக்கு அதிமுக கண்டனம்

தமிழ்நாட்டில் தீபாவளி அன்று மட்டும் 12 கொலைகள் அரேங்கேறிய சம்பவம்...

'நாளைக்கு எல்லாரும் சென்னையில இருக்கணும்!' – எம்.எல்.ஏக்களுக்குத் திடீர் அழைப்பு விடுத்த விஜய்!

தவெக எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரையும் திடீர் ஆலோசனை கூட்டத்திற்காக நாளை சென்னை...

மாவட்ட ஆட்சியருக்கு TVK MLA ஆபாசக் குறுஞ்செய்தி? "என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் விஜய்?" – கனிமொழி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது...