10
November, 2026

A News 365Times Venture

10
Tuesday
November, 2026

A News 365Times Venture

"பண்டிகை காலம் என்றால் கொலைகள் நடப்பது சகஜம் என்று நியாயப்படுத்தலாமா?"- ராஜ்மோகனுக்கு அதிமுக கண்டனம்

Date:

தமிழ்நாட்டில் தீபாவளி அன்று மட்டும் 12 கொலைகள் அரேங்கேறிய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, “பண்டிகைக் காலங்களில் இதெல்லாம் புதிதல்ல… எதிர்க்கட்சிகள் தான் வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள்” என்று அமைச்சர் ராஜ்மோகன் பேசியிருந்தார்.

ராஜ்மோகனின் இந்தப் பேச்சுக்கு அதிமுக தலைமை கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டிருக்கும் பதிவில், “தமிழ்நாட்டில் ஒரே நாளில் 12 படுகொலைகள் நடந்த செய்தி பொதுமக்களின் நெஞ்சைப் பதைபதைக்க வைத்துள்ளன.

அமைச்சர் ராஜ்மோகன்

பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருக்கும் இந்தச் சூழ்நிலையில், இதைப் பற்றி கேள்வி கேட்டால் ஒரு பொறுப்புள்ள அமைச்சர் கூறும் பதில் என்ன தெரியுமா?

​”பண்டிகை காலங்களில் இதெல்லாம் புதிதல்ல… எதிர்க்கட்சிகள் தான் வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள்!” என்ன ஒரு பொறுப்பற்ற, திமிரான பதில்!

பண்டிகை காலம் என்றால் கொலைகள் நடப்பது சகஜம் என்று ஒரு அமைச்சரே நியாயப்படுத்தலாமா?

மக்களின் உயிரைக் காக்க வேண்டிய கடமையில் இருந்து நழுவி, இதை ஒரு சாதாரண நிகழ்வாகக் கடந்து செல்லத் துடிப்பது எந்த வகையில் நியாயம்?

​நாட்டின் சட்டம்-ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு அமைச்சரின் இந்த ஒரு பதிலே சான்றாக நிற்கிறது.

கொலைகள் நடப்பது உண்மை: ஆனால் அது எதிர்க்கட்சிகளின் அவதூறா?

​மக்களின் பயம் உண்மை, ஆனால் அது பண்டிகை காலத்து “சாதாரண விஷயமா”?

​மக்களின் உயிரையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய உயரிய பொறுப்பில் இருக்கும் அமைச்சரே,

தன்னுடைய அரசின் நிர்வாக தோல்வியை மறைக்க இப்படி சாக்குபோக்கு சொல்வதும், எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுவதும் பொறுப்பற்றத்தனத்தின் உச்சம்!

க்ரைம்
க்ரைம்

பட்டிமன்ற புகழ் ராஜ்மோகன் அமைச்சரே… பண்டிகை காலம் என்பது மக்கள் சந்தோஷமாக இருக்கத்தானே தவிர, இரத்தக் களறியைப் பார்த்து அஞ்சி நடுங்க அல்ல!

குற்றங்களைக் கட்டுப்படுத்தத் துப்பில்லாமல், தங்களது அரசின் நிர்வாக கோளாறை மறைக்க அதை நியாயப்படுத்தும் வார்த்தைகளைப் பேசுவது அமைச்சர் பொறுப்புக்கு அழகல்ல.

இனியாவது வெறும் வாய் வார்த்தை சாக்குபோக்குகளை எல்லாம் நிறுத்திவிட்டு, நாளுக்கு நாள் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கைச் சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க முயற்சியாவது செய்யுங்கள்” என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"நான் பேசியது தவறாகப் புரிந்துக்கொள்ளப்பட்டது" – சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

தமிழ்நாட்டில் தீபாவளி அன்று மட்டும் 12 கொலைகள் அரேங்கேறிய சம்பவம்...

ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ்? “ஆட்சிக்கும், கட்சிக்கும் களங்கம் விளைவிக்கும்" – ஜோதிமணி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது...

'நாளைக்கு எல்லாரும் சென்னையில இருக்கணும்!' – எம்.எல்.ஏக்களுக்குத் திடீர் அழைப்பு விடுத்த விஜய்!

தவெக எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரையும் திடீர் ஆலோசனை கூட்டத்திற்காக நாளை சென்னை...

மாவட்ட ஆட்சியருக்கு TVK MLA ஆபாசக் குறுஞ்செய்தி? "என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் விஜய்?" – கனிமொழி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது...