9
August, 2026

A News 365Times Venture

9
Sunday
August, 2026

A News 365Times Venture

தொகுதி மறுவரையறை மசோதா: திமுக, சிவசேனா, திரிணாமுல் வாக்குகள் போதாதா? பாஜகவிற்கு இன்னும் சிக்கல்!

Date:

மாநிலங்களில் உள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப அவற்றிற்கு நாடாளுமன்றத்தின் மக்களவையில் பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்பதே ‘தொகுதி மறுவரையறை மசோதா’.

இந்தத் தொகுதி மறுவரையறையின் மூலம் மக்களவை சீட்டுகள் 543-ல் இருந்து 850 ஆக உயர்த்தப்படும்.

இந்த மசோதாவைத் தற்போது நடந்துகொண்டிருக்கும் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் அமலுக்குக் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம், இந்த மசோதாவை மக்களவையில் பாஜக தாக்கல் செய்தபோது, போதுமான வாக்குகள் கிடைக்காமல் அது தோல்வியுற்றது.

புதிய நாடாளுமன்றம்

ஏன் தோல்வி?

அரசியல் சாசனத்தின் படி, அரசியல் சாசனத் திருத்தச் சட்ட மசோதாவிற்கு, வாக்கெடுப்பு நாளில் மக்களவையில் கூடியிருக்கும்… வாக்களிக்கும் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் வேண்டும்.

தற்போது மக்களவையில் இருக்கும் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 528. இதில் மூன்றில் இரண்டு பங்கு என்றால், அது 352.

ஏப்ரல் மாதத்தில் பாஜக ப்ளஸ் அதன் கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை 298 ஆக இருந்தது.

இதனால், 54 வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை அமல்படுத்த முடியாமல் தோல்வியைச் சந்தித்தது பாஜக.

மீண்டும் முயற்சி!

இருந்தும் தற்போதும் பாஜக இந்தத் தொகுதி மறுவரையறையை இந்தக் கூட்டத்தொடரில் அமல்படுத்திவிட முயல்கிறது.

பாஜக-வின் இந்தத் தைரியத்திற்குக் காரணம், சமீபத்தில் இந்திய மாநிலங்களின் அரசியலில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள்.

மேற்கு வங்கம்: கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் மேற்கு வங்கத்தை ஆண்டு வந்த திரிணாமுல் காங்கிரஸ், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது.

இதனால், மேற்கு வங்கத்தின் முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது அந்தக் கட்சிக்குள்ளேயே பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டது.

இதில் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த 20 மக்களவை எம்.பி-க்கள் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளனர்.

தொகுதி மறுவரையறை
தொகுதி மறுவரையறை

மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியைச் சேர்ந்த 6 மக்களவை எம்.பிக்கள் தற்போது பாஜக கூட்டணியில் இருக்கும் ஏக்நாத் சிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு: தேர்தல் முடிவுகளுக்கு முன்பு வரை, தொகுதி மறுவரையறை மசோதாவிற்குக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தது திமுக.

‘திமுக – பாஜக கூட்டணி’ என்கிற பேச்சுகள் அடிப்படும் இந்த வேளையில், ‘மசோதா தாக்கலானதும் அதைப் படித்துவிட்டு முடிவை எடுப்போம்’ என்கிற நிலைபாட்டை எடுத்துள்ளது திமுக.

திமுகவிடம் 22 மக்களவை எம்.பிக்கள் இருக்கின்றனர்.

ஆக, இந்த மூன்று மாநிலங்களின் எம்.பிக்களின் எண்ணிக்கையைக் கூட்டினால், 48 வாக்குகள் வருகின்றன.

ஆனால், இன்னமும் 6 வாக்குகள் இடிக்கின்றன.

ராகுல் காந்தி உடன்…

இதைச் சரிசெய்ய கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 5) நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், இதற்கு ராகுல் காந்தி ஒப்புக்கொள்ளவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

அதனால், இன்னமும் இந்த மசோதா தாக்கலில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இந்தச் சிக்கலைத் தீர்த்து பாஜக எப்படி… எப்போது இந்த மசோதாவைத் தாக்கலுக்குக் கொண்டுவரும் என்று பார்க்கலாம்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக குண்டம் இறங்கிய நிர்வாகி; பதவியைப் பறித்த தலைமை!

அ.தி.மு.க-விற்குள் உட்கட்சி பூசல் அதிகரித்து வரும் நிலையில், எஸ்.பி. வேலுமணியை அக்கட்சியின்...

ராஞ்சி தேர்வு முறைகேடு: “கோரிக்கைகள் ஏற்கும் வரை போராட்டம் தொடரும்" – மாணவர்கள் அமைப்பு உறுதி

டெல்லியில் ஜந்தர் மந்தரில் அரசுத் தேர்வுகளின் குளறுபடிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்...

பழனி மட நில மோசடி வழக்கில் கைதானவர் சிறையில் உயிரிழப்பு!

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான, ரூ.100 கோடி மதிப்பிலான 1.4...

'வனத்துறையினர் ஏதாவது செய்தால் என்னுடைய எம்.பி பதவியை ராஜினாமா செய்வேன்' – தங்கதமிழ்செல்வன்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு, மேகமலை உள்ளிட்ட 90- க்கும்...