22
November, 2026

A News 365Times Venture

22
Sunday
November, 2026

A News 365Times Venture

திருப்பரங்குன்றம் விவகாரம் – உச்ச நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய தமிழக அரசு மனு!

Date:

“திருப்பரங்குன்றத்தில் உள்ள தூணில் இந்தாண்டும் மட்டும் வரும் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றி கொள்ளலாம். பொதுமக்கள் யாரும் தீபம் ஏற்றும் இடத்திற்கு செல்ல அனுமதி கிடையாது” என 

 என உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்திருந்தது. மேலும் இந்த உத்தரவு இந்த வருடத்திற்கு மட்டுமே என தெளிவுபடுத்தி இந்த வழக்கின் இறுதி விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.

இந்த தீர்ப்பை பாமக, பாஜக, மற்றும் இந்து அமைப்புகள் வரவேற்றுள்ள நிலையில் திமுக, சிபிஎம், சிபிஐ போன்ற கட்சிகள் தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றனர். வரும் செவ்வாய்கிழமை கார்த்திகை தீபம் நடப்பதால் தீபம் ஏற்றுவதற்கான வேலைகளும் நடைபெற இருக்கிறது.

திருப்பரங்குன்றம் தூண்

தமிழக அரசு மறு சீராய்வு மனுதாக்கல் செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து வருகிறோம் என  அமைச்சர் நிர்மல்குமார் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது, தமிழக அரசு. அந்த மனுவில், ” ஏற்கனவே பின்பற்றபட்ட நடைமுறையே தொடர வேண்டும். இல்லையெனில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கொளத்தூர்: வி.எஸ்.பாபு மறைவு… தொகுதியை `காலி'யாக அறிவித்த சட்டப்பேரவைச் செயலகம்!

தவெக கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ். பாபு (75)...

காவிரி: "வாடும் சம்பா பயிர்கள்; ஏக்கருக்கு ரூ 40000 வழங்க வேண்டும்"- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

"டெல்டா மாவட்டங்களில் வாடும் பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் கடுமையாக போராடி வரும்...

செக்கானூரணி காவல் நிலைய மரணம்: "முதல்வர் விஜய் இன்னும் எத்தனை நாட்கள் மௌனம் காப்பார்?"- கனிமொழி

மதுரை வாலாந்தூரில் லாரி தீப்பிடித்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக செக்கானூரணி காவல்...