தவெக கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ். பாபு (75) காலமானதைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைவரும் அப்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொளத்தூர் தொகுதியைக் கைப்பற்றி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியவர் வி.எஸ். பாபு.
கடந்த சில மாதங்களாகச் சுவாசக் கோளாறு மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த நவம்பர் 19-ம் தேதி மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதிகளின்படி கொளத்தூர் தொகுதி காலியானதாகச் சட்டப்பேரவைச் செயலகம் தற்போது அறிவித்துள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தில் திருச்சி கிழக்கு, பெருந்துறை, விராலிமலை, அம்பாசமுத்திரம் மற்றும் கரூர் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. தற்போது கொளத்தூரும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளதால், தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், விரைவில் கொளத்தூர் உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb




