29
June, 2026

A News 365Times Venture

29
Monday
June, 2026

A News 365Times Venture

திருப்பத்தூர்: பூங்காவில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்; கவுன்சிலரின் கணவர் மீது புகார்!

Date:

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியின் 4வது வார்டு பகுதியாகிய பாபு நகரில் உள்ள பூங்கா, கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு மரங்களை வளர்த்து சிறுகாடாக மாற்றப்பட்டிருந்தது. இதில் நீர் மருது, புரசை, தேக்கு, வேப்பமரம், வாகை உள்ளிட்ட மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருந்தன.

இந்த பூங்கா, சுற்றுப்புற மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அங்கிருக்கும் இயற்கை சூழலில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொண்டுவந்தனர்.

பூங்கா

இந்நிலையில், நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்காவில் 20-க்கும் மேற்பட்ட மரங்களைக் கடந்த சில நாள்களுக்கு முன் இரவோடு இரவாக வெட்டி, சிலர் கடத்தியுள்ளனர். இதில் 4வது வார்டு திமுக கவுன்சிலர் வித்யாவின் கணவர் சுரேஷுக்கும் பங்கு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

மறுநாள் நடைபயிற்சிக்கு வந்த பொதுமக்கள், பூங்காவில் மரங்கள் வெட்டப்பட்டதைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். மரங்களை வெட்ட உரிய அனுமதி பெறப்படவில்லை எனவும், சட்ட விரோதமாக மரங்களை வெட்டி கடத்தியதாகவும், ஜோலார்பேட்டை நகராட்சி கமிஷனர் பிரான்சிஸ் சேவியர், கவுன்சிலரின் கணவர் சுரேஷ் மீது ஜோலார்பேட்டை போலீசில் புகார் பதிவு செய்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, “மாவட்ட கலெக்டர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் வனத்துறையிலும் தனித்தனியாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது . விசாரனை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

MLA பதவியை ராஜினாமா செய்கிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சி.விஜயபாஸ்கருடன் தவெகவில் இணைகிறார்!| Exclusive

அதிமுக-வின் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது...

மத்திய அமைச்சரவை மாற்றம்: நிர்மலா சீதாராமனுக்கு புதிய துறை? யாருக்கு வாய்ப்பு? யார் வெளியேற்றம்?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மிக விரைவில் முக்கிய...

மனமகிழ் மன்றங்களுக்கு ரூ.30 லட்சம் வரை சிறப்புக் கட்டணம்; தமிழ்நாடு அரசின் புதிய கட்டண விவரம்

தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்புக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு...

ஆய்வுக்குப் போன இடத்தில் அரசு வாகனத்தில் ரீல்ஸ்; சர்ச்சையில் சத்தியமங்கலம் தாசில்தார்

ஈரோடு மாவட்டத்தில் அரசு அதிகாரிகளில் ஒரு சிலர் வரம்புகளை மீறி பணி...