4
June, 2026

A News 365Times Venture

4
Thursday
June, 2026

A News 365Times Venture

`திமுக நாசமாக போனதற்கு, திமுக-வினர் தான் காரணம்' – முன்னாள் அமைச்சர் மூர்த்தி

Date:

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி நேற்று  முன்னாள் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி குழந்தைகளுக்கு நோட்புக் வழங்கியும் நலிவடைந்த குடும்ப பெண்மணிகளுக்கு நான்கு லட்ச ரூபாய் மதிப்புள்ள மூன்று சக்கர ஆட்டோக்களும் வழங்கப்பட்டன.

அதன் பின் விழாவில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி பேசும்போது, “ நம்முடைய ஆட்சியில் நமது தலைவர் மக்களுக்காகப் பல திட்டங்களைச் செய்திருக்கிறார். ஆனால், அதைப் பற்றி இப்போது பேசுவதும் நினைப்பதும், பிரயோஜனம் இல்லை. மக்கள் நமக்கு ஒரு நல்ல பாடம் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பாடத்திற்கு உங்கள் எல்லோருக்கும் நன்றி.”

முன்னாள் அமைச்சர் மூர்த்தி!

இதைக் கேட்டவுடன் மேடைக்குக் கீழே இருந்த திமுக தொண்டர்கள் கைதட்டினர். அதற்கு, “ஆமா… தோற்று போனதற்கு கைதட்டுங்கள்! அதனால்தான் விளங்காமல் உட்கார்ந்திருக்கோம். தி.மு.க நாசமாக போனதுக்குக் காரணமே தி.மு.க-காரன்தான்.

 பேரன், பேத்தி சொன்னான் என ஓட்டு போட்டதால், இந்த நிலைமை.  இனிமேல் மக்களுக்குச் செய்த நன்மைகளைப் பேசி வாக்கு கேட்கத் தேவையில்லை

மக்களின் அடிப்படைத் தேவைகள் எதையெல்லாம் சொன்னார்களோ, அதையெல்லாம் செய்து கொடுத்துள்ளோம். ஆனால், நல்லது செய்து ஓட்டுப் போடுவதை விட, நீங்கள் ஒரு முடிவை எடுத்து ஓட்டுப் போட்டுள்ளீர்கள்.

இனி அதைப் பற்றிப் பேசுவதற்கு வேலை கிடையாது. நாம் தி.மு.க -விற்காக நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வோம். நாம் இனி கட்சிப் பணியை மட்டும் செய்ய வேண்டும். மக்களுக்கு எல்லாம் தெரியும், மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

மக்களுக்காக முன்னோடித் திட்டங்களை எல்லாம் செய்தவர்தான் கருணாநிதி. அவருடைய பிறந்தநாளை தி.மு.க-வின் உணர்வுள்ள தொண்டர்கள் கொண்டாடி வருகிறோம். இதைவிட பல்வேறு சோதனைகளைச் சந்தித்து இந்த இயக்கத்தைக் கட்டிக்காத்துள்ளார்கள். இப்போது இருக்கும் நம்ம தலைவரும் அதை பண்ணுவார்.

முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி
முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி

தி.மு.க கட்சியை எவராலும் அழிக்க முடியாது, உண்மையான தி.மு.க-வை வளர்க்க வேண்டும். நிகழ்ச்சிக்கு தி.மு.க உணர்வு உள்ளவர்கள் வந்திருக்கிறீர்கள். இனிமேல் வெத்தலை பாக்கு வைத்து யாரையும் அழைக்க வேண்டாம்.

ஒரிஜினல் தி.மு.க -வை வளருங்கள், அதுமட்டும் போதும். அதில் எத்தனை பேர் உண்மையாக இருக்கிறார்களோ, அதுமட்டும் போதும். நமக்கு வலு, அதை விட்டுவிட்டு மக்களுக்கு அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று சொல்ல வேண்டாம். மக்கள் தெரிந்துதான் ஓட்டுப் போட்டுள்ளார்கள்.  மாற்றுத் தரப்பினருக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள், அதை அவர்கள் பயன்படுத்தட்டும். நாம் நம் இயக்கத்தைப் பார்ப்போம்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

EB ஹார்ட் டிஸ்க் விவகாரம்: “யாரும் யாரையும் காப்பாற்ற முடியாது" – அமைச்சர் நிர்மல் குமார்

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர்,...

இந்தியா கூட்டணி: “காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திமுக பங்கேற்காது" – திமுக திட்டவட்ட அறிவிப்பு!

5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தலைமையில் 'இந்தியா' கூட்டணிக்...

சுகாதார சீர்கேட்டின் உச்சம்; சேலம் புதிய பேருந்து நிலைய அவலம் – கேள்விக்குறியா தனிமனித ஒழுக்கம்..?

சேலம் புதிய பேருந்து நிலையமானது, ஓமலூர் பிரதான சாலையில் சுமார் 5...

`ஹார்ட் டிஸ்க் மாயம் என மின் வெட்டு பிரச்னையை திசை திருப்ப முயற்சி’ – செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு!

புதுப்பிக்கப்பட்ட கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தை தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்...