11
June, 2026

A News 365Times Venture

11
Thursday
June, 2026

A News 365Times Venture

"திமுக ஆதரவு பதவியில் தொடர விருப்பமில்லை" – வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் ராஜினாமா

Date:

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. காங்கிரஸ் கட்சியில் பேரணாம்பட்டு ஒன்றியத் தலைவராக இருந்து வரும் கிருஷ்ணவேணி, கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக (District Councillor) 8-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதையடுத்து, தி.மு.க உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்ததால், மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவராகவும் (District Panchayat Deputy Chairman) தேர்ந்தெடுக்கப்பட்டார் கிருஷ்ணவேணி.

காங்கிரஸ் கிருஷ்ணவேணி

இந்த நிலையில், தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி த.வெ.க ஆட்சியமைக்க காங்கிரஸ் கைகொடுத்ததால், தி.மு.க ஆதரவில் தனக்குக் கிடைத்த மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார் கிருஷ்ணவேணி.

இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியரையும் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திருக்கிறார்.

”த.வெ.க-வுடன் நாங்கள் இணைந்ததால், தி.மு.க ஆதரவில் கிடைத்த பதவியில் தொடர எனக்கு விருப்பமில்லை. எனவேதான் என்னுடைய பதவியை மனப்பூர்வமாக முன் வந்து ராஜினாமா செய்கிறேன்” என்கிறார் கிருஷ்ணவேணி.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'பிரசவ டாக்டர் இல்லை; தாயின் வயிற்றிலேயே உயிரிழந்த கண்ணகி நகர் குழந்தை!' – உலுக்கும் Spot Report!

`எங்க குழந்தை இந்த உலகத்தை பார்க்குறதுக்கு முன்னாடியே கொன்னுட்டாங்களே....ஏழைங்க உசுருன்னா இவங்களுக்கு...

விழுப்புரம்: மீனவப் பெண்கள் தூக்கு மாட்டும் போராட்டம்; போலிசாருடன் மோதல் | Photo Album

“கடல் பசுவுக்காக மீனவர் வாழ்வாதாரத்தை சிதைக்கலாமா?” - கொதிக்கும் மீனவர்கள்! Source...

ம.பி: பாஜக-வுக்குச் சாதகமாக மாறிய களம்? – காங்கிரஸ் வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டதன் பின்னணி?

மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சியின்...