28
June, 2026

A News 365Times Venture

28
Sunday
June, 2026

A News 365Times Venture

தவெக: “திரைமறைவு பேரமா? விஜய் அடுத்த எம்.ஜி.ஆரா? ஆட்சியில் பங்கு?" – திருமாவளவனின் 'பளீச்' பதில்கள்

Date:

தவெக ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகள், விசிக கட்சிகளின் ஆதரவை தவெக தலைவர் விஜய் கோரியிருந்தார். நீண்ட விவாதங்களுக்குப் பிறகே மூன்று கட்சிகளும் தங்கள் ஆதரவை வெளியிலிருந்து தெரிவிப்பதாக அறிவித்தன.

இந்த நிலையில், திரைமறைவில் விசிக பேரம் பேசியதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுகுறித்து விளக்கமளிக்கும் வகையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான ஆதரவை வழங்கினோம்.

திருமாவளவன் – ஆதவ் அர்ஜுனா

இதற்கு பின்னணியில் திமுக இருப்பதாக வதந்திகள் பரவின. நாங்கள் தி.மு.க கூட்டணியில் அங்கமாக இருந்துதான் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றோம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பல்வேறு போராட்டக் களங்களில் பயணித்திருக்கிறோம். எனவே, ஒருவேளை திமுக ஒரு முன்மொழிவை வைத்தாலும், அதை எங்களால் புறந்தள்ளிவிட முடியாது.

அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. அமைச்சரவையில் இடம்பெற்றால், அது திமுக கூட்டணியை விட்டு முற்றாக வெளியேறுவதாகக் கருதப்படும். இது ஒரு கொள்கை ரீதியான முடிவு என்பதால், விவாதிப்பதற்கு எங்களுக்குக் கால அவகாசம் தேவைப்பட்டது.

அதற்குள் திரைமறைவுப் பேரம் நடப்பதாக வதந்திகள் பரவின. அப்படி எதுவும் நடக்கவில்லை. கட்சித் தொண்டர்கள் இப்போதும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்துத் தொடர்ந்து விவாதித்து வருகிறோம்.

முதல்வர் விஜய் என்னைச் சந்திக்கவிருப்பதாகத் தெரியவருகிறது. முதல்வர் உடனான சந்திப்பின்போது இத்தகைய கோரிக்கைகளை முன்வைக்க மாட்டோம். அது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பாகவே இருக்கும்.

சட்டசபையில் விஜய்யை அடுத்த எம்.ஜி.ஆர் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் இருந்த இடத்திற்கு விஜய் வந்திருக்கிறார் என்பதை மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் நான் பார்க்கிறேன். மக்கள் அவருக்கு அத்தகைய அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறார்கள் என்று கருதுகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பள்ளி மாணவர்களின் ID கார்டில் சாதி பெயர்? – செங்கோட்டையன் பேசியது என்ன?

நேற்று (ஜூன் 26, 2026) கோபிசெட்டிபாளையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் தமிழ்நாடு வருவாய்த்...

உத்தவ் தாக்கரேவுக்கு மேலும் அதிர்ச்சி: 14 எம்.எல்.ஏ.க்கள் ஷிண்டே கட்சியில் சேர திட்டம்?

2022ம் ஆண்டில் இருந்து சிவசேனாவிற்கு தொடர்ந்து நெருக்கடி வந்து கொண்டே இருக்கிறது....

'தமிழகத்துக்கு சம்பந்தமே இல்லாதவரை எப்படி.?' – டெல்லி பிரதிநிதி நியமனத்துக்கு நயினார் எதிர்ப்பு

தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகக் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா...

அதிமுக-வில் புதிய பதவி கிடைத்தும் எஸ்.பி.வேலுமணி அப்செட் – காரணம் என்ன?

சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த எஸ்.பி....