20
May, 2026

A News 365Times Venture

20
Wednesday
May, 2026

A News 365Times Venture

திடீர் ஆய்வுகள்: “தவெக உறுப்பினர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்?" – டிடிவி தினகரன் கேள்வி!

Date:

தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த புதிய அரசின் செயல்பாடுகள் மற்றும் ஆளுங்கட்சியினரின் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகளும் அரசியல் தலைவர்களும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அந்த வகையில், தவெக-வினர் அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் ‘ஆய்வு’ என்ற பெயரில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக அமுமுக தலைவர் டிடிவி தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில், “அரசு அலுவலகங்களிலும் மருத்துவமனைகளிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தவெகவினர் – மக்கள் நலனுக்காக இயங்கும் துறைகளில் ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம் கடும் கண்டனத்திற்குரியது.

முதல்வர் ஜோசப் விஜய்

தென்காசி மாவட்டத்தில் தவெக மருத்துவரணி எனும் பெயரில் சிலர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆய்வு நடத்தியதாகவும், தவெக மாவட்டச் செயலாளர் எனும் பெயரில் சிலர் அம்மா உணவகங்களில் ஆய்வு செய்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுங்கட்சி என்ற மமதையில் தவெகவினர் சிலர் அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவதும், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.

அரசு அலுவலகங்களில் முறையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் அரசின் நிர்வாக அமைப்பு இருக்கும்போது ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்? முதலமைச்சரின் பதவி ஏற்பு விழாவில் “யார் தவறு செய்தாலும் அவர்கள் என்னோடு இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களை விடவே மாட்டேன்” என்று சூளுரைத்த முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், அரசு அலுவலகங்களில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தனது கட்சிக்காரர்களின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? மேலும் திரு ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு அலுவலகங்களும், பொதுமக்கள் கூடும் இடங்களும் படப்பிடிப்புத் தளங்களாகவே மாறி வருவதாகப் பொதுமக்களே குற்றம் சாட்டுகின்றனர்.

முதல்வர் ஜோசப் விஜய்
முதல்வர் ஜோசப் விஜய்

ஆளும் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் என்ற போர்வையில் முதலமைச்சர் அறையில் நடக்கும் விவாதங்களும், முதலமைச்சரின் புகழ் பாடுவதற்காகப் பொதுமக்களுக்கு இடையூறு செய்து Insta Reels களாக எடுத்து வெளியிடுவதே தவெக அரசின் சாதனையாகவும் டிரெண்டாகவும் மாறியுள்ளது. எனவே, விளம்பரம் என்பது வேறு மக்கள் பணி என்பது வேறு என்பதை முதலமைச்சரும் தவெக தலைவருமான திரு ஜோசப் விஜய் அவர்கள் தனது கட்சி தொண்டர்களுக்கு உணர்திடுவதொடு, அரசு அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் தவெகவினரின் அதிகார துஷ்பிரயோகத்தை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'ரஹ்மான் கலி' டு 'ராம் கலி' : 80 ஆண்டுகளுக்குப் பின் பழைய பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் அரசு தன் நாட்டின் பழமையை பாதுகாக்கும் வகையில் தன் நாட்டின்...

`விசிக… காங்கிரஸ்… ஐ.யு.எம்.எல்' – விஜய் போடும் கணக்கு; அமைச்சரவை பட்டியல் தயார்!

முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசில் கூட்டணியாக இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு...

`மருத்துவமனைக்கு வெள்ளை கோட்டுடன் சென்றதற்கு காரணம் இதுதான்!' – தவெக நிர்வாகி வாசுதேவி விளக்கம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி தனியார் குவாரியில் பணியில்...