20
May, 2026

A News 365Times Venture

20
Wednesday
May, 2026

A News 365Times Venture

`விசிக… காங்கிரஸ்… ஐ.யு.எம்.எல்' – விஜய் போடும் கணக்கு; அமைச்சரவை பட்டியல் தயார்!

Date:

முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசில் கூட்டணியாக இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்கள், வி.சி.கவு-வுக்கு ஓர் இடம் என அமைச்சரவை விரிவாக்கத்திற்கான பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து த.வெ.க வட்டாரத்தில் விசாரித்தபோது, “காங்கிரஸ் கட்சி கூட்டணிக்குள் வரும்போதே இரண்டு அமைச்சர்கள், நாடாளுமன்றத்தில் நாற்பது சதவிகித இடங்களையும் கேட்டது. அதற்கு த.வெ.க தரப்பும் ஒப்புக்கொண்டது.

விஜய்

அதே போல் பெரும்பான்மை இடங்களை நாங்கள் கைப்பற்ற கம்யூனிஸ்ட், வி.சி.க மற்றும் ஐ.யு.எம்.எல் உள்ளிட்ட கட்சிகளின் உதவி தேவைப்பட்டது.

 காங்கிரஸ் கட்சியை தவிற பிற கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பதாக சொன்னார்கள். வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பது என்பது சிக்கலாகிவிடும் என த.வெ.க தலைமை நினைக்கிறது. இதனால், கூட்டணியில் உள்ள கட்சிகளை ஆட்சியிலும் பங்கேற்கச் செய்வதே நல்லது என த.வெ.க தலைமை நினைக்கிறது. 

இது குறித்து ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவனுடன் பேசி வந்தார். அந்தக் கட்சியில் தற்போது வன்னியரசு, ஜோதிமணி ஆகிய இருவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளார்கள். அவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்க முதலில் திட்டமிட்டனர். ஆனால், திருமாவளவனே அமைச்சராக வேண்டும் எனப் பலரும கூறியதால், திருச்சி கிழக்கு தொகுதியில் திருமாவை நிறுத்தலாம் என திட்டமிடுகிறார்கள். அப்படி ஒரு மூவ் எடுத்தால், தி.மு.க தலைவர் ஸ்டாலின் திருச்சி கிழக்கில் நிற்பதை தவிர்ப்பார் என த.வெ.க நினைக்கிறது. 

வி.சி.க-வில் அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தால் அது திருமாவளவனுக்கு கிடைக்கும். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் தலைமை அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க பரிந்துரை செய்துள்ளார்கள். விஸ்வநாதனுக்கு உயர்கல்விதுறையும், ராஜேஷ்குமாருக்கு சுற்றுலாத்துறையும் ஒதுக்கப்பட உள்ளது. 

விஜய் - ராகுல் காந்தி
விஜய் – ராகுல் காந்தி

த.வெ.கவுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் ஐ.யு.எம்.எல் கட்சிக்கு ஓர் அமைச்சர் பதவியை தர முதல்வர் முன்வந்துள்ளார். பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகானுக்கு அந்த வாய்ப்பு கிடைக்க உள்ளது. அவருக்கான துறையை முடிவு செய்யவில்லை. அதேபோல், த.வெ.கவில் கடலுார் ராஜ்குமார், பார்த்திபன், பர்வேஸ், தாஹிரா உள்ளிட்டவர்களுக்கும் அமைச்சரவையில் இடமளிக்க முடிவாகியுள்ளது. 

அரசு அமைந்து பத்து நாள்களைக் கடந்தும் அமைச்சர்கள் நியமிக்காமல் இருப்பதால், பல துறைகளில் வேலைகள் நடக்காமல் இருக்கின்றன. இதனால், விரைவில் அமைச்சரவையை விரிவுபடுத்த முதல்வர் திட்டமிட்டு இருக்கிறார். அ.தி.மு.க முகாமில் பல்வேறு குழப்பங்கள் இருப்பதால், அவர்களுக்கு இந்த முறை அமைச்சரவையில் வாய்ப்பு கிடையாது” என்கிறார்கள். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திடீர் ஆய்வுகள்: “தவெக உறுப்பினர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்?" – டிடிவி தினகரன் கேள்வி!

தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்...

`மருத்துவமனைக்கு வெள்ளை கோட்டுடன் சென்றதற்கு காரணம் இதுதான்!' – தவெக நிர்வாகி வாசுதேவி விளக்கம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி தனியார் குவாரியில் பணியில்...

59 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ்; `அந்த' 2 எம்.எல்.ஏ-க்கள் யார்?!

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்...