27
September, 2026

A News 365Times Venture

27
Sunday
September, 2026

A News 365Times Venture

தாராபுரம்: பிரசாரத்தில் தாக்கப்பட்டாரா அமைச்சர் சம்பத் குமார்? உள்ளுர் மக்கள் சொல்வது என்ன?

Date:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற‌த் தொகுதிக்குக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் நடைபெற இருக்கிறது. ராஜினாமா எம்.எல்.ஏ- வான சத்தியபாமா தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார்.

தாராபுரம் தொகுதியில் அவருக்கு எதிராகப் பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இந்த நிலையில், சத்யபாமாவை ஆதரித்து நஞ்சியம்பாளையத்தில் த.வெ.க அமைச்சர் வி. சம்பத் குமார் நேற்று இரவு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அந்தப் பகுதிக்குச் சென்ற அ.தி.மு.க-வினர், வேட்பாளர் சத்யபாமாவுக்கு எதிராகச் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அ.தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்து, ஆளுங்கட்சியிடம் இருந்து ₹50 கோடியைப் பெற்றுக் கொண்டு ராஜினாமா செய்ததாகக் கூறி, அ.தி.மு.க- வினர் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

த.வெ.க மற்றும் அ.தி.மு.க இடையே ஏற்பட்ட இந்த வாக்குவாதம் கடுமையான தள்ளுமுள்ளாக மாறி மோதலில் முடிந்திருக்கிறது.

வாக்குவாதம்

இந்தச் சம்பவத்தில் இருவருக்கு காயம் ஏற்பட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை முன்பு 300-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க- வினர் திரண்டதால் தாராபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இது குறித்து தெரிவித்த நஞ்சியம்பாளையம் மக்கள், “நேற்றிரவு அமைச்சர் சம்பத் குமார் பிரசாரத்தில் ஈடுபட்டுபோது. அ.தி.மு.க- வைச் சேர்ந்த சிலர் கேள்விகளை எழுப்பினார்கள். அமைச்சர் முன்னிலையில் இரண்டு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இரண்டு தர்ப்பைச் சேர்ந்த இருவருக்கு காயம் ஏற்பட்டது. அமைச்சர் நேரடியாகத் தாக்கப்படவில்லை. ஆனால், அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது உண்மைதான். பாதுகாப்பாக அவரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தோம். போலீஸ் அதிகாரிகளிடமும் இதைச் சொல்லியிருக்கிறோம்” என்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கரூர் துயரச் சம்பவம்: "மனதில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு..!" – முதல்வர்‌ விஜய் பதிவு

இன்றோடு கரூர் துயரச் சம்பவம் நடந்து ஓராண்டு ஆகிறது.தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர்...

"நவம்பருக்கு பின் ஈரான் மீது கடும் தாக்குதல்" – 'மீண்டும்' அந்தர்பல்டி அடிக்கும்‌ ட்ரம்ப்!

கடந்த வார இறுதியில் ஈரான் போர் குறித்து ‘ஈரானுடன் பேச்சுவார்த்தை நல்லபடியாகப்...

''ஜெம் வீரமணியால் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள்!"- 10 ஆண்டுகளுக்குப் பிறகு தாய் அதிர்ச்சி புகார்

ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கு தமிழகத்தையே உலுக்கி...

`மகனுடன் சேர்ந்து ஏரி மண் திருட்டு' – திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

கடந்த 14-12-2025 அன்று, தி.மு.க வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக்கான...