27
September, 2026

A News 365Times Venture

27
Sunday
September, 2026

A News 365Times Venture

"இதுதான் தவெக அரசின் சமூக நீதியா?" – தவெக-வின் வாக்குறுதியை மேற்கோள்காட்டி அன்புமணி காட்டம்

Date:

மின் கணக்கீட்டு பணியில் தனியார் ஒப்பந்த முறையைக் கைவிட வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகரம் உள்பட தமிழ்நாடு முழுவதும் மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் பணிகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், அந்நிறுவனத்தின் மூலம் அமர்த்தப்படும் பணியாளர்களைக் கொண்டு மின் பயன்பாடு கணக்கிடப்படும் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

நிரந்தரப் பணியிடங்களை ஒழித்து ஒப்பந்தப் பணி முறையை ஊக்குவிக்கும் இந்தச் சமூகநீதிக்கு எதிரான அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.

முதல்வர் விஜய்

தமிழ்நாட்டில் மின்பயன்பாட்டுக்கான கட்டணம் அளவுக்கு அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. வீடுகளுக்கான மின்சாரப் பயன்பாடு குறித்த கணக்கீடு சரியான நாள்களில் மேற்கொள்ளப்படாததுதான் இதற்கு காரணம் என்று தெரியவந்தது.

மின்சார வாரியத்தின் சார்பில் இந்தக் கணக்கீடுகளை மேற்கொள்ள போதிய மனிதவளம் இல்லை என்பதால் அடுத்த 6 மாதங்களுக்கு இந்தப் பணிகளை தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தப் பணியாளர்களை நியமித்து மேற்கொள்ளலாம் என்றும், இந்த ஒப்பந்தங்களை மண்டல அளவில் செய்துகொள்ளலாம் என்றும் மின்வாரியத்தின் வருவாய் பிரிவு செப்டம்பர் 24-ஆம் தேதி மண்டல பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கீடு செய்வதில் ஏற்படும் தாமதத்திற்குப் போதிய பணியாளர்கள் இல்லாததுதான் காரணம் என்பதில் ரகசியம் எதுவும் இல்லை. இந்தச் சிக்கலுக்கான தீர்வு காலியாக உள்ள மின் கணக்கீட்டாளர் மற்றும் வருவாய்ப் பிரிவுப் பணியிடங்களை நிரப்புவதுதான்.

மின்சார வாரியத்தில் உள்ள 7590 கணக்கீட்டாளர் பணியிடங்களில், 73.81%, அதாவது 5,602 பணியிடங்கள் காலியாக உள்ளன. வருவாய்ப் பிரிவுப் பணியிடங்களையும் சேர்த்தால் மொத்தமுள்ள 14,804 பணியிடங்களில், 7119 பணியிடங்கள் காலியாக உள்ளன.

அதுமட்டுமின்றி, மின் கணக்கீட்டு ஆய்வாளர் நிலையிலும், மொத்தமுள்ள 3,976 பணியிடங்களில் 1,073 காலியாக உள்ளன. நிரந்தரப் பணியாளர்களுக்கு மாற்றாக ஒப்பந்தப் பணியாளர்களை நியமிப்பதில் உள்ள அநீதிகள் குறித்து தொடர்ந்து தெளிவுபடுத்தி வருகிறேன்.

நிரந்தரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகத்தான் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். அதிலும் ஒரு பங்கு ஒப்பந்தப் பணியாளர்களை அனுப்பும் தனியார் மனிதவள நிறுவனங்களுக்குச் சென்று விடும். அந்த வகையில் இந்த வகை பணி நியமனங்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களின் உடல் உழைப்பைச் சுரண்டுகின்றன.

இரண்டாவதாக, ஒப்பந்தப் பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை. மின்சார வாரியத்தில் மின்சாரக் கணக்கீடு தொடர்பான பணிகளில் மட்டும் 8,192 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவை நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பப்பட்டால், குறைந்தபட்சம் 69%, அதாவது 5652 வேலைவாய்ப்புகள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமிய, பட்டியலின, பழங்குடியின வகுப்புகளைச் சேர்ந்த இளைஞர்களுக்குக் கிடைக்கும்.

இதன் மூலம் அவர்களின் குடும்பங்கள் முன்னேற்றம் பெறும். இதுதான் சமூகநீதி ஆகும். ஆனால், ஒப்பந்த முறை பணி நியமனங்கள் உழைப்பு சுரண்டலுக்கே வழி வகுக்கும். மூன்றாவதாக, நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கிடும்போது, அதில் ஏதேனும் தவறுகள் நடந்தால், அதற்கு அவர்களைப் பொறுப்பாக்க முடியும். ஆனால், ஒப்பந்த ஊழியர்களுக்குப் பொறுப்புடைமை கிடையாது என்பதால், அதற்கு அவர்களைப் பொறுப்பாக்க முடியாது. இதனால், அளவுக்கு அதிகமாக மின்சாரக் கட்டணம் வசூலிக்கப்படும் சிக்கல் மேலும் அதிகரிக்குமே தவிர ஒருபோதும் குறையாது.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

2026-ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர், அவர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவர் என்று வாக்குறுதி (வாக்குறுதி எண்: 2(எச்)3) அளிக்கப்பட்டிருந்தது.

அதன்படி பார்த்தால், தமிழ்நாட்டில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களில் 90%க்கும் மேற்பட்டோர் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும். ஆனால், அதை விடுத்து, மீண்டும், மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பது சமூகநீதியோ, மனித உரிமையோ அல்ல.

சமூகநீதிதான் தங்களின் உயிர்மூச்சுக் கொள்கை என்று முதலமைச்சர் விஜய்யும், தவெகவும் திரும்பப் திரும்ப கூறி வருகின்றன. நிரந்தரப் பணியிடங்களை ஒழித்து விட்டு, ஒப்பந்தப் பணியாளர்களை நியமிப்பதுதான் சமூகநீதியா? என்று மக்கள் வினா எழுப்புகின்றனர்.

தவெக தலைமையிலான அரசு, சமூக நீதியைக் காக்கும் அரசு என்பதை செயல்பாடுகள் மூலம் நிரூபிக்க வேண்டும். அதற்காக, மின் கணக்கீட்டளர் பணிக்கு ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்கும் முடிவைக் கணக்கிட்டு, அனைத்துக் காலியிடங்களையும் நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கரூர் துயரச் சம்பவம்: "மனதில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு..!" – முதல்வர்‌ விஜய் பதிவு

இன்றோடு கரூர் துயரச் சம்பவம் நடந்து ஓராண்டு ஆகிறது.தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர்...

"நவம்பருக்கு பின் ஈரான் மீது கடும் தாக்குதல்" – 'மீண்டும்' அந்தர்பல்டி அடிக்கும்‌ ட்ரம்ப்!

கடந்த வார இறுதியில் ஈரான் போர் குறித்து ‘ஈரானுடன் பேச்சுவார்த்தை நல்லபடியாகப்...

''ஜெம் வீரமணியால் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள்!"- 10 ஆண்டுகளுக்குப் பிறகு தாய் அதிர்ச்சி புகார்

ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கு தமிழகத்தையே உலுக்கி...

`மகனுடன் சேர்ந்து ஏரி மண் திருட்டு' – திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

கடந்த 14-12-2025 அன்று, தி.மு.க வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக்கான...