10
September, 2026

A News 365Times Venture

10
Thursday
September, 2026

A News 365Times Venture

தாராபுரம்: "ஒரு வார்த்தை படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் சட்டமன்றத்தில்…"- தி‌முக வேட்பாளர் காட்டம்

Date:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி உறுப்பினரான அ.தி.மு.க- வைச் சேர்ந்த சத்யபாமா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை நேற்று முன்தினம் அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். தாராபுரம் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தற்போது வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. தி.மு.க சார்பில் தாராபுரம் தனி தொகுதி வேட்பாளராக தொழில்முறை வழக்கறிஞர் சுகன்யா என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க குடும்பப் பின்னணியைக் கொண்ட இவருக்கு அக்கட்சியைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திமுக வேட்பாளர் சுகன்யா

இந்த நிலையில் நேற்று மாலை செய்தியாளர் அவரைச் சந்தித்து பேசுகையில், “தலைவர் ஸ்டாலின் அவர்கள் மிகப்பெரிய இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கிறார். தலைவர் அவர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்து விட்டு வாழ்த்து பெற்ற பிறகு முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து மக்களுக்காக நிறைய பேசுகிறேன்.

நிச்சயமாக வெற்றி வேட்பாளராக வருவேன். வெற்றிக்கனியை‌‌ தலைமைக்குச் சேர்க்க வேண்டும். தற்போது சட்டமன்றம் எப்படி நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு வார்த்தை படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் சட்டமன்றத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்.

நிறைய விஷயங்கள் பேச வேண்டியுள்ளது. நிச்சயமாக சென்னையிலிருந்து திரும்பி வந்து பேசுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

நாதக: 'இடைத்தேர்தலில் கண்டிப்பா போட்டியிடணுமா?' – தயக்கத்தில் தம்பிகள்.. சீமான் முடிவென்ன?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் 'நாம் கண்டிப்பாக போட்டியிட வேண்டுமா..' என்ற கேள்விகள்...

பிரதீப் ராஜ் படுகொலை: "முதல்வரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா?" – உதயநிதி கேள்வி

திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தன்னை அழைத்து மிரட்டியதாகப் புகார் தெரிவித்த மறுநாளே...

Vijay: "தம்பி விஜய்… நீங்கள் சொல்வது உண்மைதான்" – வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்

சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது...

சண்டை மன்றம்..!

Source link