10
September, 2026

A News 365Times Venture

10
Thursday
September, 2026

A News 365Times Venture

பிரதீப் ராஜ் படுகொலை: "முதல்வரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா?" – உதயநிதி கேள்வி

Date:

திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தன்னை அழைத்து மிரட்டியதாகப் புகார் தெரிவித்த மறுநாளே பிரதீப் ராஜ் (28) என்பவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

காவல் ஆய்வாளர் கந்துவட்டி ரவுடிக்கு ஆதரவாகச் செயல்பட்டு தன் மீது பொய் வழக்கு போடுவதாக பிரதீப் குற்றம்சாட்டி இருந்த நிலையில் இந்தச் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பிரதீப் ராஜ்

இந்தப் படுகொலை சம்பவத்தைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளப்பதிவில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூரக் கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.

‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ எனப் பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாகச் சம்பந்தப்பட்ட இளைஞரே நேற்று முன் தினம் வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

‘CM-ட்ட வேணும்னா போய் சொல்லு. என்னைய ஒன்னும் பண்ண முடியாது’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாகவும் கொலையாவதற்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ் கூறியுள்ளார்.

காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா?

காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த Circus ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்து தெரியுமா, ED என்ன பண்ணுச்சு தெரியுமா’ என்று Divert செய்யும் முதலமைச்சர், இந்தக் கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.

இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

நாதக: 'இடைத்தேர்தலில் கண்டிப்பா போட்டியிடணுமா?' – தயக்கத்தில் தம்பிகள்.. சீமான் முடிவென்ன?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் 'நாம் கண்டிப்பாக போட்டியிட வேண்டுமா..' என்ற கேள்விகள்...

தாராபுரம்: "ஒரு வார்த்தை படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் சட்டமன்றத்தில்…"- தி‌முக வேட்பாளர் காட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி உறுப்பினரான அ.தி.மு.க- வைச் சேர்ந்த...

Vijay: "தம்பி விஜய்… நீங்கள் சொல்வது உண்மைதான்" – வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்

சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது...

சண்டை மன்றம்..!

Source link