22
September, 2026

A News 365Times Venture

22
Tuesday
September, 2026

A News 365Times Venture

“தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் அதிமுக – பாஜக கூட்டணி'' – கனிமொழி காட்டம்

Date:

திமுக எம்.பி கனிமொழி அதிமுக – பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது…

“தமிழ்நாடு மக்களுக்கு இழைக்கக் கூடிய மிகப் பெரிய துரோகமாக அதிமுக – பாஜக கூட்டணி அமைந்து இருக்கிறது. தேர்தலில் இந்த கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடத்தை கற்றுத் தருவார்கள்.

பழனிசாமிக்கு பேசக் கூடிய உரிமை கூட இல்லாமல் கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக அரசு கொண்டுவந்த மக்களுக்கு எதிரான பல்வேறு மசோதாக்களையும், திட்டங்களையும் எதிர்ப்பதாக சொன்ன அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி்சாமி, உள்துறை அமித்ஷாவுடன் ஒரே மேடையில் மெளனமாக அமர்ந்து, பாஜக – அதிமுக கூட்டணியை ஆமோதித்து ஏற்றுக் கொண்டதை பார்க்க முடிந்தது.

பாஜக – அதிமுக கூட்டணி

அதிமுகவுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் இழைக்கக் கூடிய மிகப் பெரிய துரோகமாக இந்த கூட்டணி அமைந்து இருக்கிறது.

பாஜகவும், அதிமுகவும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள் என பலமுறை தமிழ்நாடு முதலமைச்சர் கூறி வந்தார். இந்த கூட்டணி மீண்டும் உருவாகும் என்பதை பல முறை சுட்டிக் காட்டி இருந்தார். அது இன்று உண்மை ஆகியிருக்கிறது. இது இன்று பட்டவர்த்தனமாக தெளிவாக தெரிய வந்திருக்கிறது

மக்களை வெகுநாள் ஏமாற்ற முடியாமல், கூட்டணியை இன்று வெளிப்படையாக அறிவிக்கக்கூடிய நிர்பந்தத்துக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார் எடப்பாட்டி பழனிசாமி”.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ட்ரம்ப் போட்ட தடை; வெள்ளை மாளிகை கவரேஜைப் புறக்கணித்த US செய்தி நிறுவனங்கள் – என்ன நடந்தது?

அமெரிக்காவில் அந்த நாட்டு அதிபர் ட்ரம்ப்பை அதிகம் விமர்சிக்கும் செய்தி நிறுவனங்களில்...

ஆதவ் அர்ஜுனாவின் கேள்வி; சிபிஐ-யின் பதிலடி; தவெக-வுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையே விரிசலா?

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர்...

அரசியல் மேடைகளில் பெண் இழிவு வார்த்தைகள்… கடுமையான எதிர்வினைகளால் வைப்போம் முற்றுப்புள்ளி!

அரசியல் சச்சரவுகளில் எதிர்த்தரப்பினரை சீண்ட பெண்களை ஆபாசமாகப் பேசுவது ஒரு கலாசாரமாகவே...

”என்னை ஒழித்துவிட்டதாக நினைப்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள்” – பாஜக கருப்பு முருகானந்தம் காட்டம்

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பு முருகானந்தம் தஞ்சாவூரில் வசித்து வருகிறார். தமிழக...