7
August, 2026

A News 365Times Venture

7
Friday
August, 2026

A News 365Times Venture

"முதல்வருக்கு தலைகுனிவு வந்தால் நாங்கள் சும்மா விட்டுவிடுவோமா?" – பிரேமலதா விஜயகாந்த்

Date:

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.

சட்டமன்றத் தேர்தலில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “பொது பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்புகள் எல்லாம் வந்திருக்கிறது. கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எல்லாம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு வந்திருக்கிறது.

தமிழக சட்டமன்றம்

தேமுதிகவை பொறுத்தவரை மக்கள் விரும்பும் திட்டங்கள் எந்த ஆட்சி வந்தாலும் தொடர வேண்டும். மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும். பிரதமர் மோடியை சந்தித்து பேச வேண்டும்.

இந்த பட்ஜெட்டில் விவசாயக் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அது அறிவிக்கப்படவில்லை என்பது ஏமாற்றம்.

அரசுகள் கடன் வாங்குவதை நாம் குறை சொல்ல முடியாது. ஏனெனில், நமக்கு பள்ளிகளிலிருந்தே கடன் வாங்கிதான் கூட்டல் கழித்தல் கணக்குகளை சொல்லிக் கொடுக்கிறார்கள். அதனால்தான் ஒவ்வொரு குடும்பமும் கடனில் இருக்கிறது.

ஜப்பானில் எல்லாம் கடன் வாங்கி கணக்கை தீர்க்க சொல்லிக் கொடுக்கமாட்டார்கள். இருப்பதற்குள்ளாகவே மாணவர்களுக்கு கணக்கை தீர்க்க கற்றுக் கொடுப்பார்கள். ஆகவே உயர்கல்வி அமைச்சரை கடன் வாங்காமல் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க வலியுறுத்துகிறேன்” என்று பேசியிருக்கிறார்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

தொடர்ந்து மேகதாது அணை கட்டுவது குறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “கர்நாடகாவுக்கு முதல்வர் போகக் கூடாது என்று ஏன் சொல்கிறீர்கள். அவர் செல்லட்டும், சென்று பேசட்டும். இல்லையென்றால் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் இங்கு வரட்டும். பேசினால்தான் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.

முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல வேண்டும். அப்படி சென்று அவமரியாதை ஆகிவிட்டால் என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். உங்களுக்கு ஒரு தலை குனிவு வந்தால் இந்தத் தமிழ்நாடு பொறுத்துக்கொள்ளுமா? நாங்கள் சும்மா விட்டுவிடுவோமா? எங்கள் முதல்வர் விஜய்யை அவமதிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று மக்கள் வெகுண்டு எழுவார்கள்” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"அதை உங்க அப்பாவிடம்தான் கேட்கணும், அவரை இங்க காணோம்..!"- ஆதவ் அர்ஜுனா Vs உதயநிதி

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இதில்...

“கடைசிகாலம் வரை எடப்பாடியாரின் படைத்தலைவர்களில் ஒருவனாக இருப்பேன்!" – கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி,...

தொகுதி மறுவரையறை மசோதா: திமுக, சிவசேனா, திரிணாமுல் வாக்குகள் போதாதா? பாஜகவிற்கு இன்னும் சிக்கல்!

மாநிலங்களில் உள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப அவற்றிற்கு நாடாளுமன்றத்தின் மக்களவையில் பிரதிநிதித்துவம் தர...

'முதல்வர் விஜய்யின் எம்.பிக்கள் கூட்ட அழைப்பை புறக்கணிக்கும் திமுக, அதிமுக?' – பின்னணி என்ன?

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பிக்களின் கூட்டத்துக்கு...