17
September, 2026

A News 365Times Venture

17
Thursday
September, 2026

A News 365Times Venture

`தமிழ்நாட்டில் ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமைகள்; இனியாவது ஸ்டாலின்…' – இபிஎஸ் காட்டம்!

Date:

கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன.

இது குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ‘தி.மு.க’ தலைமையிலான தமிழ்நாடு அரசைக் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ‘அ.தி.மு.க’ எடப்பாடி பழனிசாமி, கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் கடிதத்தில், “தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சியின் பங்காளர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம்.

எடப்பாடி பழனிசாமி

சங்க காலம் முதலே பெண் இனத்தை போற்றிப் பாதுகாத்து வந்த தமிழக வரலாற்றில், இது போன்ற கருப்பு நாட்கள் தொடர்கதையாவது மிகவும் வருத்தத்திற்கும் , கண்டனத்திற்கும் உரியதாகும் .

பயங்கரவாதிகள் ஆட்சி நடக்கும் நாடுகளில்கூட இத்தகைய கொடூரம் நடந்ததில்லை என எண்ணும் அளவு இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்களை உரிய முறையில் தடுக்காமல், பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தவறியதால், இத்தகைய கொடூரங்கள் தினந்தோறும் நிகழ்கின்றன.

இந்த ஆட்சியில் தமிழ்நாடு இப்படி சிக்கிச் சீரழிந்து வருவது குறித்து எந்தக் கவலையுமில்லாத ஸ்டாலின், ‘பெண்களுக்கு பாதுகாப்பு’ என வாய்சவடால் மட்டும் பேசினால் போதுமா? திமுக ஆட்சி நீடித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலைதான் தொடர்கிறது, இனியாவது மு.க.ஸ்டாலின் மாடல் அரசு விழித்து கொண்டு , பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

US Fed வங்கியின் வட்டி விகித உயர்வை விரும்பாத ட்ரம்ப்; Upset-ல் பிற நாடுகளை குற்றம்சாட்டுவது என்ன?

நேற்று அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் 0.25% வட்டி விகித...

“இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம்" – ஜி.கே.வாசன்

"தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பதை நிர்வாகிகளுடன் ஆலோசித்து உரிய...

"ஒரு எம்பி பதவிக்காக திமுக உடன் கூட்டணி வைத்தார்கள்" – பிரேமலதாவுக்கு வன்னி அரசு பதிலடி

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு அமைச்சர் வன்னி அரசு பதிலடி கொடுத்திருக்கிறார். ...

லண்டன் பயணம்: “முதல்வர் விஜய் செய்தியாளர்களைச் சந்தித்து…" – டி.ஆர்.பி. ராஜா அடுக்கும் கேள்விகள்

முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்க்க லண்டன் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், லண்டன்...