13
November, 2026

A News 365Times Venture

13
Friday
November, 2026

A News 365Times Venture

தஞ்சாவூர்: அடிதடியில் முடிந்த நிலத்தகராறு; பதற வைக்கும் வீடியோ; விவசாயியைத் தாக்கினாரா போலீஸ்?

Date:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள துலுக்கவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் விவசாயி. இதே ஊரைச் சேர்ந்தவர் பாதகுமார். இவர் புதுக்கோட்டை மாவட்டம் மலையூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை போலீஸாகப் பணியாற்றுகிறார்.

இவரது மனைவி கலைச்செல்வியும் காவல் துறையில் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. இதே பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். மூவருமே உறவினர்கள். பாஸ்கருக்கும், பாதகுமாருக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பாஸ்கருக்கு ஆதரவாக காமராஜ் செயல்படுகிறார் என்கிற கோபம் பாதகுமார் தரப்புக்கு இருந்துள்ளது.

மருத்துவமனையில் விவசாயி காமராஜ்

இந்நிலையில் காமராஜ் தரப்புக்குச் சொந்தமான இடத்தில் இருந்த தென்னங்கன்றுகளை பாதகுமார் தரப்பு பிடிங்கிப் போட்டதாகச் சொல்கிறார்கள். இதையடுத்து காமராஜ் மீண்டும் அதே இடத்தில் தென்னங்கன்றை ஊன்றியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாதகுமார் விவசாயி காமராஜைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாக இந்த விவகாரம் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

இதுகுறித்து காமராஜ் தரப்பில் பேசினோம், ”எனக்கு சகோதரர் முறை கொண்ட பாஸ்கர் சென்னையில் வேளாண்மை துறையில் பணிபுரிகிறார். பாஸ்கருக்கும், பாதகுமாருக்கும் நிலப்பிரச்னை இருந்து வருகிறது. என் நிலத்துக்கு அருகில் இருந்ததால் பாஸ்கர் நிலத்தை நான் பராமரித்து வந்தேன். இதனால் நான் பாஸ்கருக்குச் சாதகமாக இருக்கிறேன் என்ற எண்ணத்தில் என்னை பாதகுமார் தரப்பு அடிக்கடி வம்பிழுப்பார்கள். பாஸ்கர் முறைப்படி நில அளவையரை வைத்து நிலத்தை அளந்தார். ராதிகா என்ற சர்வேயர் நிலத்தை அளந்து தந்தார்.

விவசாயி மீது தாக்குதல்

இதைதொடர்ந்து மீண்டும் பாதகுமார் அளவை செய்ய சர்வேயரை அனுகினார். பின்னர் அதே சர்வேயர் ராதிகா மீண்டும் அளந்ததுடன் பாஸ்கர் நிலத்தில் நான்கு மீட்டர் பாதகுமாருக்கு இருப்பதாகச் சொன்னார். ‘என்ன மேடம் முதல் தடவை அளக்கும் போது எங்க நிலம் சரியா இருக்குனு சொன்னீங்க இப்ப பாதகுமாருக்கு 4 மீட்டர் நிலம் இருப்பதாக சொல்றீங்க இதை ஏற்றுக் கொள்ள முடியாது’னு சொன்னதுடன் தலைமை சர்வேயரை அனுகினோம். அவர் நில வரை படத்திலேயே தவறாக இருப்பதாகச் சொன்னதுடன் இரதரப்பும் சுமுகமாகப் பேசி தீர்த்து கொள்ளுங்கள் என நழுவி விட்டார்.

இந்நிலையில் என்னுடைய இடத்தில் இருந்த தென்னங்கன்றுகளை பாதகுமார் பெற்றோரான சுப்ரமணியன்- அஞ்சம்மாள் பிடிங்கிப் போட்டனர். இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு நான் தென்னம்பிள்ளை இருந்த அதே இடத்தில் மீண்டும் கன்று ஊன்றினேன். அப்போது வந்த இருவரும் என் மீது மிளகாய் பொடி தூவி தாக்கினர். இதைச் சற்றும் எதிர்பார்க்காத நான் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு வீட்டுக்கு வந்தேன்.

விவசாயியை தாக்கிய போலீஸ்
விவசாயியை தாக்கிய போலீஸ்

அப்போது பாதகுமார் அடியாட்களுடன் வந்து என்னைக் கடுமையாகத் தாக்கினார். நாங்க போலீஸ் குடும்பம், எங்க மீதே புகார் கொடுக்குறீயானு கேட்டு தாக்கினார். இதே நிலப்பிரச்னை தொடர்பான புகாரில் காவல் நிலையத்தில் விசாரணை நடந்த போது காவல் நிலையத்தின் வாசலில் வைத்தும் தாக்கியுள்ளார். இப்படி பாதகுமார் தொடர்ந்து அடாவடியாக நடந்து கொள்கிறார். கேட்டா நானும், என் மனைவியும் போலீஸ் நீங்க எங்களை எதுவும் செய்ய முடியாது என்கிறார். என் மீது மிளகாய் பொடி தூவி தாக்குதல் நடத்திய பாதகுமார் குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இந்த விவகாரத்தில் பாதகுமார் மற்றும் காமராஜ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதகுமாரிடம் பேசினோம், ”எங்களுக்கும் பாஸ்கரனுக்கும் நிலப்பிரச்னை இருப்பது தனிக்கதை. காமராஜ் எங்க வீட்டுக்குப் போகும் பாதையை அடைந்து கல் ஊன்றினார். இதைக் கேட்ட எனது பெற்றோரை இரும்பு கம்பியால் தாக்கினார். வேலை முடிந்து வந்த என்னையும் பலருடன் சேர்ந்து தாக்கினார்.

இதில் எடிட் செய்து ஒரு பகுதி வீடியோவை மட்டும் வெளியே விட்டுள்ளனர். என்னை அடித்ததை வெளியிடவில்லை. திட்மிட்டு இதில் தவறான தகவலை காமராஜ் தரப்பில் பரப்புகின்றனர். நான் போலீஸ் என்பதால் சட்ட விதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்கிறேன். நான் தவறும் செய்யவில்லை” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சிவகங்கை: துபாயில் தகவல் தொடர்பு துண்டிப்பு; கொல்கத்தாவில் வழிப்பறி- மீண்டது எப்படி? 18 நாள் திகில்!

வெளிநாட்டில் உழைத்துவிட்டுத் தாயகம் திரும்பும் ஆசையில் விமானம் ஏறக் காத்திருந்த கணவர்...

"Teleprompter பயன்படுத்திக் கொள்ளுங்கள்; உங்களுக்குப் பிடித்தவரே நடுவர்"- மோடிக்கு ராகுல் சவால்!

இந்திய பிரதமர் மோடி தன்னுடைய பேச்சுகளின் போது, டெலி பிராம்ப்டர் பயன்படுத்துகிறார்...

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே பிடியாணை: நீதித்துறையை அதிரவைத்த ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் காலமானார்

இந்திய நீதித்துறை வரலாற்றில் பதவியில் இருந்தபோதே உச்ச நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவரும்,அதிரடியான...

இந்தியா வரவிருந்த நார்வே பத்திரிகையாளரின் விசா ரத்து; அரசியல் கட்சிகள் கண்டனம் – இதுதான் காரணமா?

நார்வே நாட்டை சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளர் ஹெல் லிங், இந்தியா வருவதற்கான...