8
November, 2026

A News 365Times Venture

8
Sunday
November, 2026

A News 365Times Venture

சிவகங்கை சோகம்: இறந்த தந்தையின் உடலுடன் 3 நாள்கள் வசித்த மனநலம் குன்றிய மகன்!

Date:

சிவகங்கையில் தந்தை உயிரிழந்தது கூடத் தெரியாமல், அவரது உடலுடன் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் மூன்று நாள்களாக ஒரே வீட்டில் வசித்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை கமலா நேரு தெருவைச் சேர்ந்தவர் வின்சென்ட் பிரபு (வயது 72). இவரது மனைவி சாந்தா மேரி கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.

இந்த தம்பதிக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் ஒரு மகன் கொரோனா காலத்தில் உயிரிழந்த நிலையில், மற்றொரு மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். எஞ்சிய இரு மகன்களான ஆரோக்கிய செல்வராஜ் மற்றும் டேவிட் ஆகிய இருவரும் மனநல பாதிப்புடன் தந்தையுடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் ஆரோக்கிய செல்வராஜ் பெரும்பாலும் தெருவில் சுற்றித்திரிந்து வந்த நிலையில், டேவிட் என்பவர் தந்தையுடன் வீட்டிலிருந்து வந்துள்ளார்.

சிவகங்கை சோகம்

ஏற்கெனவே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்த வின்சென்ட் பிரபு, கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு வீட்டிற்குள்ளேயே தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தந்தை உயிரிழந்ததை உணர முடியாத நிலையில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட மகன் டேவிட், அவரது உடலுடனேயே அந்த வீட்டிற்குள் தொடர்ந்து இருந்துள்ளார்.

நாள்கள் கடந்த நிலையில் உடல் அழுகத் தொடங்கி, வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

தகவலின் பேரில் விரைந்து வந்த சிவகங்கை காவல்துறையினர், வீட்டிற்குள் உயிரிழந்து கிடந்த வின்சென்ட் பிரபுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உறவுகள் பல இருந்தும் ஆதரவற்ற நிலையில் முதியவர் உயிரிழந்ததும், தந்தை இறந்த விவரம் தெரியாமல் மனநல பாதிப்புடன் மகன் மூன்று நாள்களாகச் சடலத்துடனேயே வசித்து வந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பெரியார் அறிவுலகம் நூல் சர்ச்சை: "பொது நூலகங்களை ஆய்வு செய்ய விசாரணை ஆணையம் வேண்டும்" – திருமாவளவன்

Qகோவை பெரியார் அறிவுலகத்தில் உண்மைக்கு முரணான கருத்துகளைக் கொண்ட புத்தகங்கள் அதிக...

'இந்தியாவின் ராமர்களும்…மோடி காலத்திய வலதுசாரி படங்களும்!' – ஓர் அலசல்!

தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருக்கும் 'ராமாயணம்' திரைப்படத்தின் ஒரு புரோமஷன் நிகழ்ச்சி. அதில்...

'ஆட்குறைப்பு, நோ ரெஸ்பான்ஸ், கள்ள மௌனம்!' – ஒன்றிய – மாநில உறவு கமிட்டியை தவெக அரசு எப்படி கலைத்தது?

ஒன்றிய - மாநில அரசுகளின் உறவு குறித்து ஆராய திமுக ஆட்சிக்...

OM: 'சாய் பல்லவி ரொம்ப இன்னசன்ட்டா இருந்தாங்க, ஆனா இப்போ சந்திரமுகி மாதிரி சினிமாவை.!'- தனுஷ்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிப்பில்...