11
March, 2026

A News 365Times Venture

11
Wednesday
March, 2026

A News 365Times Venture

"சிந்து நதியிலிருந்து ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தான் செல்லாது" – மத்திய நீர்வளத்துறை அமைச்சர்

Date:

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 25 சுற்றுலாப் பயணிகளும் ஒரு உள்ளூர்வாசியும் கொல்லப்பட்ட கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு, 1960-ம் ஆண்டு போடப்பட்ட இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலான சிந்து நதிநீர் ஒப்பத்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு முடிவு செய்தது.

அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இல்லத்தில் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலும் கலந்துகொண்டார்.

அமித் ஷா

அதற்குப் பிறகு சி.ஆர். பாட்டீல் தன் எக்ஸ் பக்கத்தில், “சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து மோடி அரசு எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு தேசிய நலனுக்காக முற்றிலும் நியாயமானது.

சிந்து நதியிலிருந்து ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்குச் செல்லாமல் பார்த்துக் கொள்வோம். வியாழக்கிழமை பாகிஸ்தானின் நீர்வள அமைச்சகத்தின் செயலாளர் சையத் அலி முர்துசாவுக்கு இந்த முடிவு குறித்து கடிதம் அனுப்பப்பட்டது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அமித் ஷாவின் இல்லத்தில் நடந்த கூட்டத்தில் இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான திட்டம் விவாதிக்கப்பட்டதாகவும், ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதை உடனடியாகச் செயல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாகவும் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

13 ஆண்டுகளாக படுத்தப் படுக்கையாக இருக்கும் மகன்; `கருணை கொலை' கோரிய பெற்றோர் – நீதிமன்றம் அனுமதி!

2013-ல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஹரிஷ் ராணா என்ற மாணவர்...

இனி 'இந்த' நிலம், வீடு பத்திரப் பதிவுகளுக்கு பான் கார்டு தேவையில்லை!

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல், புதிய வருமான வரிச் சட்டம்...

`எங்கள் குடும்பம் இப்படி ஆனதற்கு திமுக கைக்கூலிகளும் ஒரு காரணம்..!' – அன்புமணி ராமதாஸ்

தங்கள் குடும்பம் இப்படி ஆனதற்கு திமுக கைக்கூலிகளும் ஒரு காரணம் என்று...

அமெரிக்காவிற்கு பெரும் சிக்கலாகும் ஈரான் 'டிரோன்கள்' – உக்ரைனுக்கு 'நோ' சொன்ன விளைவு இது!

அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டுமே வளர்ச்சி, பொருளாதாரம், தொழில்நுட்பம் என அனைத்திலும் மிகப்பெரிய...