23
September, 2026

A News 365Times Venture

23
Wednesday
September, 2026

A News 365Times Venture

ECI `பல உத்தரவுகள் எங்கள் அனுமதி இன்றியே வெளியாகின்றன'- SIR விவகாரத்தில் தேர்தல் ஆணையர்கள் அதிருப்தி

Date:

இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) நாடு முழுவதும் மேற்கொண்ட ‘சிறப்பு தீவிர திருத்தம்’ (SIR) நடவடிக்கையின்போது, சுமார் 1.3 கோடி வாக்காளர் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது பெரிய பொது விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் உள்ளேயே அதிகாரிகளிடையே கடுமையான கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் நிலவுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்

தேர்தல் ஆணையாளர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவரும், தங்களின் கவனத்திற்கு வராமலேயே பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதாகக் கூறி, கடந்த 10 மாதங்களில் 14 முறை எழுத்துப்பூர்வமாகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட இந்த ஆவணங்களில், ஆணையத்தின் நடைமுறைகள் சட்டவிரோதமாக மீறப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முக்கியமாக, புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் ‘படிவம் 6’-ல் விதிகளை மீறி மாற்றங்கள் செய்யப்பட்டது, வாக்காளர் பட்டியலின் தரவுத்தளத்தை (Database) மத்திய மயமாக்கி உள்ளூர் அதிகாரிகளின் அணுகலைக் குறைத்தது போன்ற குற்றச்சாட்டுகளை இவர்கள் எழுப்பியுள்ளனர். மேலும், மேற்கு வங்கத்தில் தகுதிபெற்ற வாக்காளர்களுக்கு எதிராக ஏன் மேல்முறையீடு செய்ய வேண்டும்? அப்படி ஆணையத்தின் சார்பில் மேல்முறையீடு செய்ய உத்தரவிட்டது யார்? அதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? எனக் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

தேர்தல் ஆணையர்கள்; சுக்பீர் சிங் சாந்து, ஞானேஷ்குமார், விவேக் ஜோஷி
தேர்தல் ஆணையர்கள்; சுக்பீர் சிங் சாந்து, ஞானேஷ்குமார், விவேக் ஜோஷி

மேலும், கோவாவில் மென்பொருள் கோளாறால் தகுதியான 97 வாக்காளர்கள் விடுபட்டதையும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசியலமைப்புச் சட்டப்படி, தேர்தல் ஆணையத்தின் அனைத்து முடிவுகளும் அனைத்து ஆணையர்களின் ஒருமனதான ஒப்புதலுடனே எடுக்கப்பட வேண்டும். ஆனால், பல உத்தரவுகள் தங்கள் அனுமதி இன்றியே வெளியாகின்றன என இரு ஆணையர்களும் கவலை தெரிவித்துள்ளனர். நாட்டின் தேர்தல்களை நேர்மையாக நடத்த வேண்டிய உச்சபட்ச அமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சிப் பூசல் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"IIT-களில் 45 மாணவர்கள் தற்கொலை; 62%க்கும் மேல் SC/ST/OBC மாணவர்கள்" – மாணிக்கம் தாகூர் கண்டனம்

"SC/ST/OBC மாணவர்களின் பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்ய மோடி...

`மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்பு; கடந்த 10 மாதங்களில் நடந்ததை மட்டும்..!' – ECI விளக்கம்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார்...

இன்னும் 7 நாள்களில் ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்குமா? அமெரிக்காவில் ஈரான் குழு! விரைவில் குட் நியூஸ்?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து...

“ஈரானைத் தவிர்க்க ‘IMEC’ பொருளாதாரப் பாதை" – முழு ஆதரவு தெரிவித்த ட்ரம்ப்

மத்திய கிழக்கு நாடுகளின் மீது ஈரான் நடத்தி வரும் கடல்வழித் தாக்குதல்களை...