19
October, 2026

A News 365Times Venture

19
Monday
October, 2026

A News 365Times Venture

`சவாலுக்குத் தயாரா?' – நீட் தேர்வு விவகாரம், எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விட்ட முதல்வர் ஸ்டாலின்

Date:

ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா, அரசின் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை முதல்வர் ஸ்டாலின் தலைமையேற்று தொடங்கி வைத்தார். நீட் விவகாரம் குறித்து மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ” முன்னாள் முதல்வர்கள் தலைவர் கலைஞர், அம்மையார் ஜெயலலிதா ஆகியோர் இருந்தவரை தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வு நுழையவில்லை. அவர்களின் மறைவுக்குப் பிறகு தான் நீட் தேர்வை இங்கு நுழையவிட்டார்கள்.

முதல்வர் ஸ்டாலின்

பா‌.ஜ.க – வின் பாதம் தாங்கியாக இருந்து வரும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.‌ பன்னீர்செல்வம் ஆகியோர் தான் நீட் தேர்வைக் கொண்டு வந்தவர்கள். தமிழ்நாட்டு மாணவர்கள் மீது அக்கறை இருப்பது போல நடித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. பா.ஜ.க – வுடன் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டி வரும் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளித்தால் தான் பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க இணையும் என்ற நிபந்தனையை முன்வைக்க முடியுமா ? எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விட்டு சொல்கிறேன். நிச்சயம் இதை செய்ய மாட்டார். ஏனென்றால் அவருக்கு தமிழ்நாட்டின் நலன் முக்கியமில்லை ” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஆயுத பூஜை: “உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும்" – முதல்வர் விஜய் வாழ்த்து

நவ​ராத்​திரி நிறை​வாக கொண்​டாடப்​படும் சரஸ்​வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி பண்​டிகைகளை...

`இடைத்தேர்தலில் அது நடக்காமல் போயிருந்தால் திமுக டெபாசிட்கூட வாங்கியிருக்காது!' – துரை வைகோ

திருச்சி, மன்னார்புரம் பகுதியில் புதிய பேருந்து நிறுத்தத்தை திருச்சி எம்.பி துரை...

அதிபர் தேர்தல் அரசியலா?: `பிரான்ஸ் எரிகிறது; கடுமையான நடவடிக்கை உண்டு' – இம்மானுவேல் மக்ரோன்!

விலைவாசி உயர்வு, மோசமான கல்விச் சூழல் போன்றவற்றைக் கண்டித்து பிரான்ஸ் நாடு...

கேரளம்: பேக்கரியில் ஹார்ட்டி ஒயின் விற்பனை சர்ச்சை; கிளம்பிய எதிர்ப்பு… மாற்றப்பட்ட கலால் அதிகாரி!

கேரள மாநிலம் சாலக்குடியில் உள்ள எம்.ஆர்.சி என்ற பிரபல பேக்கரியில் 15...