24
August, 2026

A News 365Times Venture

24
Monday
August, 2026

A News 365Times Venture

குடியுரிமை: “3 நாடுகளுக்கு தூதுராக இருந்தேன்; எனக்கே இந்த நிலை…" – நவதீப் சிங் சூரி சொல்வதென்ன?

Date:

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான இந்தியத் தூதராகவும், ஆஸ்திரேலியாவுக்கான உயர் ஆணையராகவும் பணியாற்றியவர், நவதீப் சிங் சூரி. இவர் பஞ்சாபில் நடைபெற்ற இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிரத் திருத்த நடைமுறையின் (SIR) போது, தான் எதிர்கொண்ட அனுபவம் குறித்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “பஞ்சாபில் நடைபெற்ற சிறப்பு தீவிரத் திருத்த நடைமுறையின் போது வாக்குச்சாவடி நிலை அலுவலரைச் (BLO) சந்தித்து எனது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையைச் சமர்ப்பித்தேன். அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால், 2003-ம் ஆண்டின் விவரங்களுடன் சில தகவல்கள் ஒத்துப்போகவில்லை என்று ஒரு அலுவலரிடமிருந்து எனக்கு செய்தி வந்தது.

நவதீப் சிங் சூரி

மேலும், வாக்காளர் அலுவலர் என்னை நேரில் வந்து ஒரு அறிவிப்பைப் பெற்றுக்கொண்டு, இந்தியக் குடியுரிமையை நிரூபிப்பதற்கான சில ஆவணங்களுடன் வருமாறு கேட்டுக் கொண்டார். 2003-ம் ஆண்டில் நான் இந்தியாவில் இருக்கவில்லை என்று பதிலளித்தேன். அதன்பின்னர், சான்றாக எனது பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர். வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையைத் தவிர வேறு சில ஆவணங்கள் என்னிடம் உள்ளன. ஆனால், மூன்று நாடுகளுக்கு இந்தியத் தூதராகப் பணியாற்றிய பிறகும், எனது குடியுரிமையை நிரூபிப்பதில் எனக்குச் சிரமம் ஏற்படுகிறது என்றால், சாதாரணக் குடிமக்களின் நிலை என்ன? இதுதானா வாழ்க்கையை எளிதாக்கும் நடைமுறை?” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தமிழ்நாடு கனிம வளத்துறையில் அடுத்தடுத்து எழும் புகார்கள்: TAMIN இருக்கும்போது புதிய நிறுவனம் ஏன்?

தமிழ்நாடு அரசுக்கு முக்கியமான வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் கனிம வளத்துறையில்,...

"பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை..!"- உதயநிதி கண்டனம்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று...

புதுச்சேரி பட்ஜெட்: `21 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப பொருளாதார மண்டலம்!’ – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலையில் தொடங்கியது. காலை 9.30...

“சினிமாவில் ஹீரோ; அரசியலில் வில்லன் ஆக்ட்..!" – முதல்வர் விஜய்யை விமர்சிக்கும் டி.டி.வி.தினகரன்

அமமுக-வின் தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் தெற்கு ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தியின் இல்லத்...