1
August, 2026

A News 365Times Venture

1
Saturday
August, 2026

A News 365Times Venture

குடியாத்தம்: `தவெக எம்எல்ஏ வெக்கமில்லாமல் பல்லிளிக்கிறார்’- வெளிநடப்பு செய்த திமுக நகர்மன்றத் தலைவர்

Date:

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் இன்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தைப் புறக்கணித்து கவுன்சிலர்களுடன் வெளிநடப்பு செய்தார், தி.மு.க-வைச் சேர்ந்த நகர்மன்றத் தலைவர் சௌந்தரராஜன்.

அப்போது பேசிய சௌந்தரராஜன், “ஸ்டாலின் ஆட்சியில் நகராட்சி பொதுநிதியில் நாங்கள் செய்துமுடித்த சாலை திட்டப்பணியை ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள்கூட ஆகாத குடியாத்தம் த.வெ.க எம்.எல்.ஏ சிந்து, அவர் செய்ததுபோல வெக்கமில்லாமல் திறந்து வைத்து பல்லிளிக்கிறார். இந்த பணியை சிறப்பாகச் செய்தது யார்? என்று கூப்பிட்டு சால்வைப் போடவில்லை. எம்.எல்.ஏ-வின் இந்தச் செயலைக் கண்டிக்கிறோம்.

தி.மு.க நகர்மன்றத் தலைவர் சௌந்தரராஜன்

இந்த ஆட்சியில், இதுவரை 5 பைசாகூட சட்டமன்ற நிதி ஒதுக்கப்படவில்லை. நகராட்சியில் சொத்துவரி, குழாய் வரி கட்டுகிறார்கள். இதிலிருந்து பொது நிதி பெற்று முக்கியமான பணிகளை மேற்கொள்வோம். இப்போது, `பொது நிதி எடுத்து எந்த பணிகளையும் செய்யக் கூடாது’ என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக ஆணையர் சொல்கிறார். `ஏன் டெண்டர் வைக்கவில்லை?’ என்று கேட்டாலும், `மேலிருந்து உத்தரவு வரவில்லை’ என்கிறார். இதையெல்லாம் கண்டித்துதான் வெளிநடப்பு செய்திருக்கிறோம்’’ என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வாங்குவதில் புது ரூல்ஸ்' – மக்களவையில் மசோதா நிறைவேற்றம்; பின்னணி என்ன?

பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்ந்து பல ஆண்டுகள் கழித்துப் பதிவு செய்யும்...

CJP: “தவறான பாதையில் சென்ற நமது இளைஞர்களை நாம் மன்னிக்க வேண்டும்" – பிரதமர் மோடி வீடியோ

கடந்த ஜூலை 23 அன்று, டெல்லி ஜந்தர் மந்தரில் 'காக்ரோச் ஜனதா...

'முதல்வருக்கு ஒரு நியாயம் கவுன்சிலருக்கு ஒரு நியாயமா?' – மாநகராட்சியில் வெடித்த 'டெண்டர்' விவகாரம்!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் கடந்த ஜூலை 29 ஆம் தேதி...