31
July, 2026

A News 365Times Venture

31
Friday
July, 2026

A News 365Times Venture

'வந்தே மாதரம்' மசோதா: `நாட்டை பிளவுப்படுத்தும் நீங்கள்தான் உண்மையான தேசத்துரோகி' – கனிமொழி கண்டனம்

Date:

‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழி வகுக்கும் ‘தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா 2026’-ஐ கடந்த 24-ஆம் தேதி மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார்.

இதன் மூலம் ‘வந்தே மாதரம்’ பாடலை வேண்டும் எனும்போது தடுப்பது அல்லது குழப்பம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவது இந்த மசோதாவின் மூலம் குற்றமாகக் கருதப்படும்.

நாடாளுமன்றம்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கிய பங்காற்றிய ‘வந்தே மாதரம்’ பாடலின் கண்ணியத்தையும், பெருமையையும் பாதுகாப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம் என மத்திய அரசு விளக்கமளித்திருந்தது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா நேற்று (ஜூலை.29) மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மக்களைவையிலும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த மசோதாவுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

நாடாளுமன்றத்தில் விவாதத்தின்போது பேசிய திமுக எம்.பி கனிமொழி, “தேசபக்தியை ஒரு சட்டத்தின் மூலம் மக்கள் மீது கட்டாயப்படுத்தக் கூடாது. வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாக்குவது இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானது.

புதிய நாடாளுமன்றம்
புதிய நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்தில் முறையான விவாதம் நடத்தாமல் இந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது. வந்தே மாதரம் பாடாவிட்டால் தேசத்துரோகிகள் என்கிறது பாஜக. ஆனால் நாட்டை பிளவுப்படுத்தும் நீங்கள்தான் உண்மையான தேசத்துரோகிகள்” என்று காட்டமாக பேசியிருக்கிறார்.

‘தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா 2026’ மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியிருக்கும் நிலையில், குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்று சட்டமாக வடிவம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கரூர்: `நிதி ஒதுக்கியாச்சு; சாலை எப்போது போடுவீங்க?'- சிதிலமடைந்த சாலைகள்; கேள்வி எழுப்பும் மக்கள்!

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. அங்கு நான்கு...

`கர்நாடக முதல்வரை அழைத்து வந்து டெல்டா வறட்சியை, முதல்வர் விஜய் காட்ட வேண்டும்' – பி.ஆர்.பாண்டியன்

தஞ்சாவூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன்...

குடியாத்தம்: `தவெக எம்எல்ஏ வெக்கமில்லாமல் பல்லிளிக்கிறார்’- வெளிநடப்பு செய்த திமுக நகர்மன்றத் தலைவர்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் இன்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தைப் புறக்கணித்து...

மேகதாது விவகாரம்: “ராகுல் காந்தியால் இந்த ஒரு வரியை பகிரங்கமாகச் சொல்ல முடியுமா?" – அன்புமணி சவால்!

கர்நாடக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதோ அல்லது மேகதாது பகுதியைப் பார்வையிடுவதோ தமிழ்நாட்டுக்குப்...