17
November, 2026

A News 365Times Venture

17
Tuesday
November, 2026

A News 365Times Venture

காவல் நிலையத்தில் `மிரட்டல்' தொனியில் ரீல்ஸ்; கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் வீடியோ சர்ச்சை!

Date:

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரும் த.வெ.க-வின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளருமான வ.காந்திராஜ் தனது அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட தக்கோலம் காவல் நிலையத்தில் ஆய்வு என்ற பெயரில் நள்ளிரவில் உள்ளே சென்று, பெண் காவலரிடம் மிரட்டும் தொனியில் பேசியதாகவும், அதை ரீல்ஸ் வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

அந்த ரீல்ஸ் வீடியோவை, த.வெ.க-வின் வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து கொலாபரேட்டராக அமைச்சர் காந்திராஜின் இன்ஸ்டா பக்கத்தை ஒன்றிணைத்திருக்கின்றனர். வீடியோவில், கைகளை பின்னால் கட்டிக்கொண்டு அமைச்சர் காந்திராஜ் காவல் நிலையத்துக்குள் நுழைகிறார். அதிலிருந்தே `கருப்பு’ திரைப்படத்தில் இடம்பெறும் `தானடி தானாரடி ராவடி ராங்காவெடி’ பாடல் வரிகள் பின்னணி இசையுடன் ஓடத் தொடங்குகிறது.

அமைச்சர் காந்திராஜின் ரீல்ஸ் பதிவு

பணியில் சீருடையுடன் இருக்கும் காவலர்களை அழைத்து பேசும் அமைச்சர் காந்திராஜ், பெண் காவலர் ஒருவரிடம் மிரட்டும் தொனியில் பேசுவதுபோன்ற காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. `இன்ஸ்பெக்டர் யாருமே இல்ல. இயர் எண்டு வருது’ என்று காந்திராஜ் பேசுவதும், தொடர்ந்து கைகளை பின்னால் கட்டிக்கொண்டு அங்கும் இங்குமாக நடப்பதும்போன்ற காட்சிகளுடன் ரீல்ஸ் முடிகிறது.

ஒருநாளுக்கு முன்னதாக பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த ரீல்ஸ் வீடியோவை இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்கள் பார்த்திருக்கின்றனர். அமைச்சரின் செயல்களை பார்த்த பார்வையாளர்கள் பலரும் கமெண்ட் செக்ஷனில் கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றனர். இதையடுத்து, கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்துவிட்டார்கள் அமைச்சர் காந்திராஜின் ஆதரவாளர்களான த.வெ.க தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மதுரை நகைக்கடை கொள்ளை: நிஷாந்திற்கு டிசம்பர் 1 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்; நகைகள் முழுமையாக மீட்பு

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் கடந்த 12...

`நேட்டோவுக்காக டான்பாஸை விட்டுக்கொடுக்குமா உக்ரைன்?' ட்ரம்ப் பேரத்தை போட்டுடைத்த ஜெலன்ஸ்கி!

“2022-ல ரஷ்யா படையெடுத்ததுக்கு ஒரு முக்கிய காரணம், உக்ரைன் நேட்டோவுல சேரக்கூடாதுங்கறது....

சூரசம்ஹாரம்: 'முருகனுடன் முதல்வர் விஜய்யை ஒப்பிட்டேனே?' – புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்

திருச்செந்தூரில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்...

கடன் வாங்கியவரை அவமானப்படுத்தலாமா? கடன் கொடுத்தவருக்கு என்னென்ன உரிமைகள்? சட்டம் சொல்வது என்ன? – 16

நண்பருக்கோ, உறவினருக்கோ நம்பிக்கையின் அடிப்படையில் பணம் கொடுத்திருப்போம். ஆனால், திருப்பிக் கேட்டால்...