13
November, 2026

A News 365Times Venture

13
Friday
November, 2026

A News 365Times Venture

"கடந்த ஆட்சியைக் காட்டிலும் குறைந்த விலைக்கே சைக்கிள் கொள்முதல்" – அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்

Date:

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ”கோவை மாவட்டத்தில் உள்ள 1,369 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 879 மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி கேக் வழங்கப்பட்டுள்ளது.

பெரியார் அறிவுலக ஊழல் விவகாரம் விசாரணையில் இருக்கிறது. முறையான விசாரணை செய்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.

முதலமைச்சர் விஜய் ஆட்சியில் மக்களின் வரிப்பணத்தைச் சரியான முறையில் பயன்படுத்துவோம். எங்கும் முறைகேடாகச் சென்று சேராது. கடந்த முறை சைக்கிள்களை எந்த விலையில் கொள்முதல் செய்தார்களோ, அதனைக் காட்டிலும் குறைந்த விலையிலேயே ஆர்டர் கொடுக்கப்படும். 5,32,000 சைக்கிள்கள் வினியோகம் செய்ய 277 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மையுடன்தான் அனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது நபருக்கு மட்டும் செல்லக்கூடிய டெண்டர் இல்லை. அதுமட்டுமின்றி சைக்கிள் டெண்டர் தொடர்பாக அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்குத் தரமான சைக்கிள்கள் வழங்கப்படும். கடந்த ஆட்சியைக் காட்டிலும் குறைந்த விலையில் சைக்கிள் கொள்முதல் செய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். முதல்வர் விருப்பப்படி அது ஸ்போர்ட்ஸ் மாடல் சைக்கிளாக இருக்கும். அதனுடன் ஹெல்மெட், வாட்டர் பாட்டில்களும் வரும்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஆரணி: தவெக மா.செ மீது பாலியல் புகார்; கட்சி அலுவலகத்தை இழுத்து மூடிய பெண் நிர்வாகிகள்! நடந்தது என்ன?

த.வெ.க-வில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் எம்.சத்யா என்கிற சத்தியராஜ்....

தவெக 6 மாத ஆட்சி: “ முதலமைச்சர் தன் கடமையை உணர்ந்து செயல்படவில்லை..!" – சிபிஐ வீரபாண்டியன்

தவெக அரசின் இந்த 6 மாதகால ஆட்சி எப்படி இருந்தது என்பது...

'All is well, Confident-ஆ இருங்க.!'- குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கேக் வழங்கிய முதல்வர்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் ...

அயலக உயர்கல்வித் திட்டம்: "மாணவர்களை மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?" – ஸ்டாலின் காட்டம்

தமிழ்நாடு அரசின் சமூகநீதி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் அண்ணல் அம்பேத்கர்...