5
September, 2026

A News 365Times Venture

5
Saturday
September, 2026

A News 365Times Venture

“கடந்த ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து" – முதல்வர் விஜய் அறிவிப்பு

Date:

தமிழ்நாட்டில் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த 2021 மே மாதம் முதல் 2026 ஏப்ரல் மாதம் வரையிலான காலத்தில், தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது முந்தைய ஆட்சியாளர்களால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்

இந்த முடிவின் மூலம் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு இந்த அரசு எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்பது மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்த சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதான வழக்குகள் மற்றும் சில விவசாயிகள் மீது பிரயோகிக்கப்பட்ட குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன.

அதேபோல், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தால் விவசாய நிலங்களும் நீர்நிலைகளும் பாதிக்கப்படும் எனக் கூறி போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டு, நிலுவையில் இருக்கும் வழக்குகளும் கைவிடப்படுகின்றன.
அமைதியான வழிப் போராட்டங்களை மதிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, நாட்டின் ஜனநாயக உரிமைகளை மேலும் பலப்படுத்தும் எனக் கருதப்படுகிறது. மேலும், சாமானிய மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையை இது வலுப்படுத்தும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பட்டா வழங்குவதாக மலைவாழ் மக்களிடம் ரூ.1 கோடி லஞ்சம்? – வனத்துறை அலுவலர்கள் 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை பகுதிகளான ஜமுனாமரத்தூர், மேல்மட்டு, நாடனூர் உள்ளிட்ட...

சட்டசபை நிகழ்ச்சிகளைப் பதிவு செய்ய கண்ணாடியில் AI கேமராவா? – அமைச்சர் முகமது பர்வேஸ் விளக்கம்

தமிழ்நாட்டு அமைச்சரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும்,...

'வெடி சத்தம் மட்டுமே; புகையும் இல்லை; தீயும் இல்லை' – ஈரானின் Kharg தீவை மீண்டும் தாக்கிய அமெரிக்கா?

ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்லி...

KN நேரு வீட்டில் சோதனை: "நேருவைப் பழிவாங்க பார்க்கிறார்கள்; பணிந்து போகாது திமுக" – கனிமொழி

முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ-வுமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் வீட்டில் இன்று...