‘நான் என்ன பாலியல் தொழிலாளியா சீமான்? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது’ என சீமான் மீது பாலியல் புகார் கொடுத்துள்ள நடிகை, வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், ‘பெண்கள் குறித்து பேசும் போது தலைவர்கள் கண்ணியமாக பேச வேண்டும்’ என்று பிற அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், “எது கண்ணியமான பேச்சு என்று நீங்கள் சொல்லுங்கள்?
என்னை பாலியல் குற்றவாளி என்று எப்படிச் சொல்லுவீர்கள்?” என்ற கேள்வி கேட்ட சீமான், புகார் கொடுத்த நடிகையை பாலியல் தொழிலாளி என்று குறிப்பிட்டதோடு அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் கூறினார். “அவர்தான் பெண், எங்கள் வீட்டில் எல்லாம் பெண்கள் இல்லையா? எங்கள் மனது காயப்படாதா?” என்று ஆவேசமாக பேசியிருந்தார்.
இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி கண்ணீருடன் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். வீடியோவில் பேசியிருக்கும் அவர், ” நான் என்ன பாலியல் தொழிலாளியா சீமான்? என்னை பாலியல் தொழிலாளி என்று சொல்லியிருக்கிறாய்… நான் பாலியல் தொழிலாளியாக இருந்தால் எதற்காக பெங்களூரில் என்னுடைய அக்காவுடன் கஷ்டபடப்போகிறேன்?
இந்த நாள் வரை நீ தப்பித்து இருக்கலாம். ஆனால் இனிமேல் நீ தப்பிக்கவே முடியாது. என்னுடைய கண்ணீரை உன்னை என்ன செய்யப்போகிறது என்பதை மட்டும் நீ பார்…என்னுடைய கண்ணீர் உன்னை சும்மா விடாது” என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs