7
August, 2026

A News 365Times Venture

7
Friday
August, 2026

A News 365Times Venture

'திமுக திட்டங்களுக்கு தவெக ஸ்டிக்கரா?' – அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?

Date:

மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார்.

அப்போது பட்ஜெட்டில் திமுகவின் திட்டங்களுக்கு தவெக ஸ்டிக்கர் ஓட்டுகிறது என்ற விமர்சனம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், “ஆட்சி மாறும்போது நல்ல திட்டங்களை தொடர்வது வழக்கம்தான். ஒவ்வொரு ஆட்சியிலும் சில திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன.

பட்ஜெட்: விஜய் – மரிய வில்சன்

அரசு சார்பிலான திட்டங்கள் 70-80 ஆண்டுகளாக இருக்கும் திட்டங்கள்தான். ஒவ்வொரு ஆட்சியிலும் செய்வதுபோல்தான் இந்த நிதிநிலை அறிக்கையில் செய்துள்ளோம்.

புதிய நிதி ஆதாரங்களைச் சீரமைக்கும் பணிகளை முதல்வர் விஜய் செய்து வருகிறார்” என்றிருக்கிறார்.

தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 உயர்த்தப்படுவது எப்போது என்ற கேள்விக்கு, “நிதி ஆதாரத்தைக் கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் பேசிய அவர், “உங்களுக்கே தெரியும் தமிழக நிதி நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று… மின்சார வாரியம், ஆவின், போக்குவரத்துத் துறை என எல்லாத்தையும் மூடும் அளவிற்குத்தான் கடந்த ஆட்சி விட்டு சென்றிருக்கிறது.

தமிழக வேளாண் பட்ஜெட்
தமிழக வேளாண் பட்ஜெட்

நேற்று எடப்பாடி சொல்கிறார், புதிய ஆதாரத்தைப் பெருக்குவதற்கு பட்ஜெட்டில் எதுவும் செய்யவில்லை என்கிறார். அவர்கள் ஆட்சியில் அப்படி என்ன செய்தார்கள்.

நிதி ஆதாரத்தைப் பெருக்க திமுக, அதிமுக ஆட்சி காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?” என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“ஆதவ் அர்ஜுனா தான் சீட் வாங்கி கொடுத்தார்..!" – சட்டமன்றத்தில் ரகசியத்தை உடைத்த திமுக எம்.எல்.ஏ

``அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுகவில் இருக்கும்போது அவர்தான் எனக்குச் சீட் வாங்கிக்...

ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியே அமெரிக்க கப்பல்கள் கடந்து செல்ல தடை? ஈரான் `புது' பிளான்!

ஹார்முஸ் நீர்ச்சந்தியை ஈரானும் விடுவதாக இல்லை... அமெரிக்காவும் விடுவதாக இல்லை. அமெரிக்காவும்,...

`உதயநிதி விவகாரத்தில் கைதா?' – கருணாநிதி நினைவு நாள் நிகழ்ச்சியைத் தவிர்த்த திமுக முன்னாள் மேயர்!

திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில், தஞ்சாவூரில் கடந்த 3ம்...