27
October, 2026

A News 365Times Venture

27
Tuesday
October, 2026

A News 365Times Venture

`எட்டு தலித் அமைச்சர்கள் வந்துவிட்டால் எல்லாம் மாறிவிடுமா..?’ – அமைச்சர் வன்னி அரசு

Date:

கோவையில் சாதியப் பாகுபாடு காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவர் அகிலனின் இல்லத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் வன்னி அரசு, மாணவரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அவர், மாணவரின் இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னி அரசு, ”முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி இங்கு வந்துள்ளேன். எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பள்ளி வளாகங்களில் நீண்ட காலமாக நிலவிவரும் சாதியப் பாகுபாடுகளைக் களைய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். பள்ளிகளில் சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்ற நீதியரசர் சந்துரு குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சட்டமன்றத்திலேயே வலியுறுத்தியுள்ளேன்.

அகிலன் உடலுக்கு அஞ்சலி

இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் எவ்வளவு பெரிய சாதிப் பின்புலம் கொண்டவர்களாக இருந்தாலும் தப்ப முடியாது. அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். நான் அமைச்சரவையில் இருந்தாலும் முதல் நாளிலிருந்தே தோழர்களுடனும், காவல்துறை அதிகாரிகளுடனும் தொடர்ந்து பேசி உரிய நீதிக்காக அழுத்தம் கொடுத்து வருகிறேன். அமைச்சராக இல்லாதிருந்தால் நானும் போராட்டக் களத்திலேயே நின்றிருப்பேன். அரசில் எத்தனை அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. இந்தச் சமூகம் ஆயிரம் ஆண்டுக்கால சாதிய மற்றும் சனாதனக் கட்டமைப்பைக் கொண்டது. பட்டியல் சமுகத்தைச் சேர்ந்த எட்டு பேர் அமைச்சராக வந்துவிட்டதால் அனைத்தும் மாறிவிடும் என்று நம்புவது மூடநம்பிக்கை. சாதிய அழுக்குகளையும் இந்துத்துவத்தையும் வேரறுத்து, சாதியப் பாகுபாடுகள் முழுமையாக ஒழியும் வரை சமூக விடுதலைக்கான போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

விழுப்புரம்: செஞ்சி சிறுமி மாயமான விவகாரம் – மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே நிற்கும் காவல்துறை!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி...

`சிலையும் இல்லை நினைவு மண்டபமும் இல்லை!'- மருது சகோதரர்கள் பிறந்த என்.முக்குளம் கிராமத்தினர் ஆதங்கம்

ஆங்கிலேய ஏகாதிபத்திய அதிகாரத்தை எதிர்த்து வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஜம்புத்தீவு பிரகடனத்தை’ வெளியிட்டு,...

DPDP: `பத்திரிகை சுதந்திரம் கேள்விக்குறியாகும்'- வழக்கு தொடர்ந்த 21 செய்தி நிறுவனங்கள்; விவரம் என்ன?

டிஜிட்டல் செய்தி இணையதளங்களின் செயல்பாடுகளுக்கும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கும் மத்திய அரசின் தனிநபர்...

“ஒரே நாளில் 17 கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் செல்லும் அவலநிலை நிலவுகிறது” – கனிமொழி சாடல்!

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர்...