10
June, 2026

A News 365Times Venture

10
Wednesday
June, 2026

A News 365Times Venture

உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் தவெக! விரைவில் கட்சி மாறும் தமாகா யுவராஜா?

Date:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் யுவராஜா, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கட்சியில் இணைவது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை நேரில் சந்தித்து யுவராஜா விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், கட்சியில் அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் வழங்கப்படவுள்ள பொறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் உட்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

என். ஆனந்த்

உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக தவெக தனது அமைப்பை மாநிலம் முழுவதும் வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்களை ஈர்க்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வரிசையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசனின் தீவர ஆதரவாளரான யுவராஜாவின் இணைப்பு, நடக்கும் பட்சத்தில், அது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே, வரும் வாரத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் யுவராஜா அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்றும், அந்த நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'பிரசவ டாக்டர் இல்லை; தாயின் வயிற்றிலேயே உயிரிழந்த கண்ணகி நகர் குழந்தை!' – உலுக்கும் Spot Report!

`எங்க குழந்தை இந்த உலகத்தை பார்க்குறதுக்கு முன்னாடியே கொன்னுட்டாங்களே....ஏழைங்க உசுருன்னா இவங்களுக்கு...

விழுப்புரம்: மீனவப் பெண்கள் தூக்கு மாட்டும் போராட்டம்; போலிசாருடன் மோதல் | Photo Album

“கடல் பசுவுக்காக மீனவர் வாழ்வாதாரத்தை சிதைக்கலாமா?” - கொதிக்கும் மீனவர்கள்! Source...

ம.பி: பாஜக-வுக்குச் சாதகமாக மாறிய களம்? – காங்கிரஸ் வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டதன் பின்னணி?

மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சியின்...