26
August, 2026

A News 365Times Venture

26
Wednesday
August, 2026

A News 365Times Venture

உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம்: `விடுவிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்' – என்ன நடந்தது?

Date:

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிமன்றம், “நாளை சட்டமன்றம் கூட உள்ள நிலையில், இன்றே விசாரணையை முடித்து உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “காவிரி நீர் பிரச்னை குறித்த தஞ்சையில் நடைபெற்ற ஒரு மாபெரும் கூட்டத்தில் மாண்புமிகு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

உதயநிதி ஸ்டாலின் கைது

அந்த உரையில், அவர் குறிப்பிட்டதாகக் கூறி, சில வார்த்தைகளை மட்டும் தனியாகப் பிரித்தெடுத்து, அவருடைய உரைக்கும் அந்த வார்த்தைகளுக்கும் உள்ள அர்த்தங்களில் உள்அர்த்தத்தைக் கற்பித்து, தவெக-வைச் சார்ந்த ஒரு நபர் `பெண்களை அவமரியாதை செய்ததாக’ பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் நேற்று இரவே FIR பதிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இன்று காலை சுமார் 8:30 மணி அளவில் தஞ்சாவூர் போலீசார் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்ய வந்திருந்தார்கள்.

இன்று காலை 10:30 மணி அளவில், உயர்நீதிமன்றத்தில் இந்த கைது நடவடிக்கை சட்டத்திற்கு விரோதமானது என்றும், அந்த முதல் தகவல் அறிக்கையே சட்டத்திற்கு விரோதமானது என்பதை எடுத்துச் சொல்லி, இதை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம். அதைக் கருத்தில் எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம், மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக இவ்வழக்கை எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்திருந்தது.

நாங்கள் தஞ்சாவூரில் இருந்து வந்த போலீசாரிடம், `உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க இருக்கிறது. அதுவரை கைது செய்ய வேண்டாம்’ என நடைமுறையில் இருக்கக்கூடிய சட்ட நெறிகளையும் மாண்புகளையும் எடுத்துச் சொன்னோம்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத தஞ்சாவூர் போலீசார், வலுக்கட்டாயமாக எதிர்க்கட்சித் தலைவர் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றார்கள்.

மதியம் 1:00 மணி அளவில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அரசு தரப்பில் “எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டார்; அதனால் இந்த முன்ஜாமீன் மனு நிலைக்கத்தக்கது அல்ல” என்று வாதாடினார்கள்.

அப்போது உயர்நீதிமன்றம், “இந்த சென்னை உயர்நீதிமன்றம் இது போன்ற வழக்குகளில் இடைக்கால உத்தரவுகளைக் கொடுத்திருக்கிறது. இதனுடைய விரிவான விசாரணையை 2:15 மணிக்குக் கேட்கிறேன்” என்று தெரிவித்தது. அதன்பின் 2:15 மணிக்கு வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அரசு வழக்கறிஞர், `காவல்துறையினருக்கு எதிர்க்கட்சித் தலைவரை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று ரிமாண்ட் செய்யக்கூடிய எண்ணம் எதுவும் இல்லை. நாங்கள் காவல் நிலையத்திலேயே விசாரித்து, அவருடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்த பிறகு, காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்போகிறோம்” என்று கூறினார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

அதைச் குறித்துக்கொண்டு சென்னை உயர்நீதிமன்றம், “நாளை முக்கியமான சட்டமன்றக் கூட்டத்தொடர் இருப்பதால், இன்றே அந்த விசாரணையை முடித்து, இன்றே ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என உத்தரவாக வழங்கியது.

எப்படியாவது எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்து, நாளை அவர் சட்டமன்றத்திற்குள் வரக்கூடாது என்று திட்டமிட்டார்கள். ஆனால், வழக்கம் போல் நீதிமன்ற உத்தரவால் மற்றொரு முறை சர்வாதிகாரம் தமிழ்நாட்டில் தடுக்கப்பட்டிருக்கிறது.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`பரந்தூர் விமான நிலையத்திற்குப் பதிலாக மீனம்பாக்கத்தில் 5-வது முனையம்'- எம்.பி சச்சிதானந்தம் யோசனை!

திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த பாஸ்போர்ட் அலுவலகம்...

ஈரானுடன் வணிகம் செய்த 4 இந்திய நிறுவனங்கள்; இப்போது அமெரிக்காவின் ‘தடை’ வலையில்! என்ன நடக்கும்?

ராணுவத் தாக்குதலிலிருந்து பொருளாதாரத் தாக்குதலுக்கு மாறியுள்ளது ஈரான் போர். அமெரிக்க...

'அப்படி பேசியிருக்கக் கூடாது..!'- மதிமுக குறித்து பேசிய செங்கோட்டையன்; துரை வைகோ ரியாக்ஷன் என்ன?

மதிமுக குறித்த தவெக அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சு குறித்து அக்கட்சியின் முதன்மைச்...