27
May, 2026

A News 365Times Venture

27
Wednesday
May, 2026

A News 365Times Venture

'உச்சாணியில் ஏற்றிவிட்ட தமிழகத்திற்கு நன்றிக்கடன் இதுவா?' – விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

Date:

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதற்கும், ஆனைமங்கலம் செப்பேடுகள் மீண்டும் இந்தியா வந்தது குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

“உண்மையிலேயே நீங்கள் தமிழகத்தின் முதல்வரா அல்லது தமிழினத்தின் எதிரியா திரு. ஜோசப் விஜய் அவர்களே?

நமது மத்திய அரசு சார்பாக, தமிழகத்தைச் சேர்ந்த 13 சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு, அதில் 7 பேருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டு 24 மணி நேரங்கள் கடந்துவிட்டன.

விஜய்

விருது வாங்கியவர்கள் எல்லாம் செல்வச் செழிப்பில் திளைத்து, பண மெத்தையில் புரண்டவர்கள் இல்லை. சாதாரண குடும்பத்தில் பிறந்து தங்களது அசாத்திய திறமையினால் உலகை திரும்பிப் பார்க்கச் செய்த தமிழர்கள்.

அவர்களின் இந்த வெற்றி கண்டு உங்களுக்கு அகம் மகிழவில்லையா? நமது நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அவர்களைப் போன்ற சாமானியர்களுக்கு கிடைத்தது உங்களுக்கு பிடிக்கவில்லையா?

முதல்வராக இல்லாவிடிலும் சாதாரண தமிழனாக நீங்கள் கொண்டாடி களிக்க வேண்டிய நிகழ்வல்லவா இது? பின்பு எதற்கு இந்த கனத்த மௌனம்?

நமது சோழ மன்னர்களின் வரலாற்று அடையாளமான “ஆனைமங்கல செப்பேடுகள்” நமது தாயகம் திரும்பியதற்கும் நீங்கள் வாயைத் திறக்கவில்லை. நமது தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகள் கிடைத்ததற்கும் நீங்கள் வாழ்த்துக் கூறவில்லை.

உங்களைத் தோள் வலிக்க தாங்கிப்பிடித்து உச்சாணியில் ஏற்றிவிட்ட தமிழகத்திற்கு நீங்கள் காட்டும் நன்றிக்கடன் இதுதானா திரு. ஜோசப் விஜய்? இப்படியொரு ஆணவ முதல்வரை தமிழக வரலாறு இதுவரைக் கண்டதில்லை”. என பதிவிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'பாட்டிலுக்கு 10 ரூபாய்…' – ஒரு டாஸ்மாக் ஊழியரின் லஞ்ச கதை!

`பாட்டிலுக்கு 10 ரூபாய்...' என தேர்தல் பிரசாரத்தின் போது கரூரில் விஜய்...

"அமலாக்கத்துறை சோதனை ராகுல் காந்திக்கு பெரிய மனநிறைவை தரும்" – ஆவேசமான பினராயி விஜயன்!

திருவனந்தபுரத்தில் ​தனது வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைக்குப் பிறகு பினராயி விஜயன்...

`தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் வான்வழி அமைப்பு டு மேகதாது! – விஜய் மோடியிடம் வைத்த கோரிக்கைகள்

தவெக தலைவர் விஜய், முதல்வராக பதவியேற்றப் பிறகு முதல் அரசுமுறைப் பயணமாக...

குப்பை மேலாண்மை: "கடந்த காலத்திலிருந்து பாடம் படிங்க" – தவெக MLA-வுக்கு பூவுலகின் நண்பர்கள் பதில்!

திருச்சி அரியமங்கலம் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்காக, துவாக்குடி அருகே உள்ள...