24
June, 2026

A News 365Times Venture

24
Wednesday
June, 2026

A News 365Times Venture

ஈரோடு: தூய்மைப் பணியைத் தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவு – போராட்டத்தில் இறங்கிய பணியாளர்கள்!

Date:

தமிழ்நாட்டில் உள்ள சில மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை முழுமையாகத் தனியார் வசம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்திருப்பதாக கடந்த சனிக்கிழமை தகவல்கள் வெளியாகின. தமிழ்நாடு அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. ஈரோடு மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

இது குறித்து தெரிவித்த தொழிலாளர்கள், “ஈரோடு மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களில் 1,200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த மற்றும் தினக்கூலிப் பணியாளர்கள் பணியாற்றி வருகிறோம். தூய்மைப் பணியாளர்களுக்கு ₹760, ஓட்டுநர்களுக்கு ₹792 தினக்கூலியாக வழங்கப்படுகிறது. தனியார்மயமாக்கப்பட்டால், இடைத்தரகர்களின் கமிஷன் போக எங்களுக்கு வெறும் ₹400 மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்படும். 10 முதல் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இதே வேலையை நம்பி இருக்கும் எங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். தமிழ்நாடு அரசு இந்த முடிவைக் கைவிட வேண்டும். எங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை, இந்த வேலைநிறுத்தப் போராட்டமும் அடுத்தகட்ட ஆர்ப்பாட்டங்களும் தொடரும்” என்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'விஜய் பிறந்தநாள் விழாவுக்காக 300 பேருந்துகளை காத்திருக்க வைப்பதா?'- அன்புமணி கண்டனம்

"விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளையொட்டி, புதிய பேருந்துகள் இயக்கத் தொடக்க விழாவுக்காக...

திருவானைக்காவல்: `டாஸ்மாக் கடையை மூடக் கூடாது' – போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்; என்ன நடந்தது?

திருச்சி, திருவானைக்காவல் அடுத்த அழகிரிபுரம் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு...

ஈரானுக்கு கிடைக்கும் $12 பில்லியன்: 'உணவுக்கும், மருந்துக்கும் தான்' ட்ரம்ப் தகவல்; ஈரான் மறுப்பு!

போர் நிறுத்தத்தில் ஈரானுக்கு இருக்கும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று - ஈரானின்...

TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!

TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன...