19
June, 2026

A News 365Times Venture

19
Friday
June, 2026

A News 365Times Venture

'இரண்டு ஆண்டுகள் இல்லாத அளவிற்கு' ரஷ்ய எண்ணெய் நிலையங்கள் மீது உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்

Date:

நேற்று தான் ஈரான், அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதற்குள் இன்று உக்ரைன் ரஷ்யா மீது இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

ரஷ்யாவின் செய்தி நிறுவனமான TASS-ன் தகவலின் படி, மாஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது பல ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அதன் பாதிப்பைச் சரிசெய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா, உக்ரைன்

மேயரின் புள்ளிவிவரங்களின்படி, இன்று அதிகாலை முதல் வான்வழிப் பாதுகாப்புப் படையினர் 190-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

கபோட்னியா (Kapotnya) பகுதியில் உள்ள மாஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது சில ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

2022-ம் ஆண்டு முதல் தொடர்ந்து வரும் இந்தப் போர் ஒரு முடிவு இல்லாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. உக்ரைனின் இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யா பதிலடி தருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அது என்னவாக இருக்கப் போகிறதோ?

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`எத்தனை தடவை தேசிய கீதம் போடணும்னு நான் முடிவு பண்ணிப்பேன்!' – அவையில் கடுப்பான சபாநாயகர்

ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் அவையில் நடந்து வருகிறது....

`அமெரிக்க அதிபர்தான் பிரச்னை என்று இஸ்ரேலில் யாராவது நினைத்தால்.!'- துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் காட்டம்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தத்திற்கான இடைக்கால ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில்,...

`மக்கள் முதுகில் குத்தாதீர்கள்’ – எம்.எல்.ஏ வழக்கில் புதுச்சேரி அரசுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!

`வருமானத்துக்கு அதிகமாக ரூ.106 கோடி சொத்து!’புதுச்சேரி 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்...