18
October, 2026

A News 365Times Venture

18
Sunday
October, 2026

A News 365Times Venture

“இந்து அறநிலையத்துறை அலுவலகத்துக்குள் மழைநீர்; ஆவணங்கள் பாதுகாப்பு என்ன ஆவது?" – சேகர் பாபு கேள்வி

Date:

நேற்று மாலை முதல் சென்னையில் அதிகனமழை பொழிந்திருந்தது. குறிப்பாக, வடசென்னை பகுதிகளில் குறுகிய நேரத்தில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிக கனமழை பொழிந்திருக்கிறது. இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்ததுறை அலுவலக வளாகத்தில் குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளது. இது குறித்து முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தன் முகநூல் பக்கத்தில், “கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில், இதைவிடப் பெருமழை பெய்த காலங்களில்கூட இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் இவ்வாறு மழைநீர் தேங்கியதில்லை!

இந்து சமய அறநிலையத்துறை

சென்னை மாநகராட்சி நிர்வாகம் உறக்கத்தில் இருப்பதாக மக்கள் கேள்வி எழுப்பும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறையும் அதே அலட்சியப் போக்கில் செயல்படுவது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

அனைத்து விவகாரங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி விளக்கம் கேட்கும் ஆணையர், தனது அலுவலக வளாகத்திலேயே மழைநீர் தேங்கியிருப்பதற்கு யாரிடம் விளக்கம் கேட்கப் போகிறார்?

கோயில்களின் நிர்வாகம், சொத்துப் பாதுகாப்பு, பழமையான ஓலைச்சுவடிகள் மற்றும் அரிய ஆவணங்களைப் பாதுகாப்பது எனப் பல முக்கியப் பொறுப்புகளைக் கொண்ட துறையின் அலுவலகத்திலேயே மழைநீர் தேங்குவது கவலைக்குரியது. நீர் உட்புகும் அபாயம் இருந்தால், நூலகங்களிலும் ஓலைச்சுவடிப் பாதுகாப்புப் பெட்டகங்களிலும் உள்ள அரிய ஆவணங்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிப்புகள் வெளியிடப்படும் நிலையில், நடைமுறையில் இத்தகைய நிலை ஏன் ஏற்பட்டது? வடிகால் வசதிகள் முறையாகப் பராமரிக்கப்பட்டனவா? மழைநீர் தேங்குவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா?

இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறை

அறிவிப்புகளும் சுற்றறிக்கைகளும் மட்டும் நிர்வாகமல்ல; களத்தில் தெரியும் செயல்பாடுகளே நிர்வாகத்தின் அளவுகோல்!

மழைநீர் தேங்கியதற்கான காரணம் என்ன, பொறுப்பான அதிகாரிகள் யார், அரிய ஆவணங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா என்பவை குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்கப்பட வேண்டும். இனியும் இதுபோன்ற அலட்சியம் நிகழாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Chennai Rain: அப்டேட் கேட்கும் முதல்வர்; மழை இரவில் ஆப்சென்ட் ஆன பொறுப்பு அமைச்சர்கள்- பின்னணி என்ன?

நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை சென்னையில் அதிகனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது....

ஹைதராபாத் விபரீதம்: தாண்டியா ஆடிய மாணவர்கள் மீது சரிந்த லைட்டிங் – கல்லூரி விழாவில் மாணவி உயிரிழப்பு

ஹைதராபாத் நாதர்குலில் உள்ள எம்.வி.எஸ்.ஆர் (MVSR) பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தாண்டியா...

இந்தியா, ரஷ்யா மீதான வரி: தடை நீக்க 60 நாள் அவகாசம் கேட்கும் அதிபர் ட்ரம்ப்! – காரணம் என்ன?

ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட பிற...

"தனுஷ் அதிமுகவில் இணைந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம்"- அதிமுக ராஜேந்திர பாலாஜ பாலாஜி கூறியதென்ன?

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்து...