1
September, 2026

A News 365Times Venture

1
Tuesday
September, 2026

A News 365Times Venture

"இந்தத் தந்திரத்தில் நாங்கள் வீழ மாட்டோம்"- விஜய் உடனான சந்திப்பு குறித்து மாணிக்கம் தாகூர்

Date:

சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தவெக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் நிலையில், பிரதமர் வேட்பாளர் தொடர்பாக கூட்டணிக்குள் விவாதங்கள் எழுந்திருக்கிறது.

தவெகவினர் முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர் என தொடர்ச்சியாக கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில், அதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது.

இதனிடையே நேற்று (ஆக.31) சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்யை மாணிக்கம் தாகூர் சந்தித்து பேசியிருந்தார்.

முதல்வர் விஜய்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மாணிக்கம் தாகூரிடம் இந்தச் சந்திப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “நாங்கள் கூட்டணி கட்சிகள், மரியாதை நிமித்தமாகத் தான் சந்தித்தோம். நான் வேறு கூட்டணிக் கட்சி தலைவர்களைச் சந்தித்திருந்தால் அதில் அரசியல் இருக்கும். இந்தச் சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை.

உண்மையான உறவுகளைப் பிரிக்கும் தந்திரங்களை செய்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தந்திரத்தில் நாங்கள் வீழ மாட்டோம். இந்தத் தந்திரங்கள் தோற்கடிக்கப்படும்.

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. தமிழகத்தின் முதல்வராக விஜய் தொடர வேண்டும். அவர் நல்லாட்சி செய்து கொண்டிருக்கிறார்.

விஜய் - ராகுல் காந்தி
விஜய் – ராகுல் காந்தி

ஊழலற்ற ஆட்சியை அவர் தொடர்ந்து வழங்க வேண்டும். அதற்கு அவருடன் காங்கிரஸ் கட்சி துணை நிற்கும். ராகுல் காந்தியை பொறுத்தவரை விஜய் உடனான உறவு சகோதரத்துவமான உறவு. இவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு பலமாக இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

US: இந்தியர்களின் Green Card கனவுக்கு பெரிய தடை? – 179 ஆண்டுகள் வரை காத்திருப்பா?

அமெரிக்காவில் வேலை அடிப்படையில் (Employment-based) கிரீன் கார்டு (Green Card) பெறக்...

Mettur Dam: `93 ஆண்டுக்கால மேட்டூர் அணை வரலாற்றில் இது 62- வது‌ முறை!' – அதிகாரிகள் சொல்வதென்ன?

தமிழ்நாட்டில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கும் அதிகமாக சாகுபடி மேற்கொள்ளப்படும்...

’தவெக ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நிலைக்காது’ – எடப்பாடி பழனிசாமி ஆரூடம்!

கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்....

சேகர் பாபு, மா.சுப்பிரமணியனுக்கே முன்னுரிமை – கொதிப்பில் உதயநிதி! தலைநகர் திமுக-வில் என்ன நடக்கிறது?

தலைநகர் தி.மு.க-வில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய அக்கட்சியின் தலைவர்...