18
May, 2026

A News 365Times Venture

18
Monday
May, 2026

A News 365Times Venture

‘இதுதான் உங்களது நாகரிக அரசியலா ஜோசப் விஜய்?’ – வானதி சீனிவாசன் சாடல்!

Date:

பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின் தொன்மையான சோழர் பெருமையை 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு சின்ன பாராட்டுகூட தெரிவிக்க முடியாத அளவுக்கு உங்களுக்கு தமிழ் வரலாறு மீது எவ்வளவு அலட்சியம் இருக்க வேண்டும்?

முதல்வர் ஜோசப் விஜய்

ஒட்டுமொத்த தமிழகமும் பிரதமரைப் பாராட்டி உச்சி நுகர்ந்து கொண்டாடும் வேளையில், நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் லெய்டன் பல்கலைக் கழகத்திலிருந்து தாயகம் திரும்பிய மகத்தான நிகழ்வுக்கு தமிழக முதலமைச்சர் என்ற முறையில் நீங்கள் இதுவரை பதிலாக மெத்த மௌனத்தையே சாதித்திருக்கிறீர்கள். இது வெறும் மறதியல்ல, திட்டமிட்ட அலட்சியம் என்றே தோன்றுகிறது. 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்றால் உடனடியாக அறிக்கை கொடுக்கும் உங்களுக்கு, தமிழ் பண்பாட்டையும் சோழர் வரலாற்றையும் உலகுக்கு மீண்டும் அறிவித்த பிரதமருக்கு ஒரு வார்த்தை நன்றி சொல்லக்கூட தயக்கம் வருகிறதா?   ‘மாற்றம்’ என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த உங்களின் நடவடிக்கைகள் கடந்த கால தி.மு.க ஆட்சியை விட எந்த விதத்திலும் வித்தியாசமில்லை.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

தமிழர் வழிமரபில் வந்த நீங்கள், நமது தமிழ் வரலாறு மீட்டெடுக்கப்படும் போது அதற்கு பாராட்டு தெரிவிக்காமல் இருப்பதுதான் நாகரிக அரசியலா? உங்களால் மாற்றம் வரும் என்று நம்பி ஓட்டுப் போட்ட மக்களை இந்த மௌனம் ஏமாற்றுகிறது. செப்பேடுகள் தமிழகத்திற்கு வரும் நாளை சிறப்பாகக் கொண்டிட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை மூடல் – நிம்மதியடைந்த பொதுமக்கள்!

தமிழக அரசு, கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள...

`இந்திய ரூபாய்-ன் வீழ்ச்சியை அரசு கண்டும் காணாமலும் இருப்பது இதனால்தான்' – நிபுணர் சொல்வதென்ன?

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது....

ஆந்திரா: `நீண்டகாலத் திட்டமிடல் இல்லாமல் வெறுமனே…' – விவாதத்துக்குள்ளாகும் அரசின் திட்டம்!

மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டபோது, தென்...

கேரளம்: `மகளிர் இலவச பஸ் பயணம், முதியோருக்கு சிறப்பு துறை'- புதிய முதல்வர் வி.டி.சதீசன் அறிவிப்பு!

கேரளத்தின் 13-வது முதல்வராக வி.டி.சதீசன் இன்று பதவி ஏற்றார். திருவனந்தபுரம் செண்ட்ரல் ...