9
October, 2026

A News 365Times Venture

9
Friday
October, 2026

A News 365Times Venture

இடைத்தேர்தல் வெற்றி: 'எல்லாமே மாறும்' – சொல்லி அடித்த முதல்வர் விஜய்!

Date:

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்று, தமிழக அரசியலில் ஒரு புது சகாப்தத்தை உருவாக்கியிருக்கிறது த.வெ.க. அதாவது, இடைத்தேர்தல் என்றாலே ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாசாரத்தை முறியடித்து, முதல்வர் விஜய்யின் முகத்தை மட்டுமே முன்னிறுத்தி வெற்றிவாகை சூடியிருக்கிறது த.வெ.க. “இந்த வெற்றியின் பின்னால் இருக்கும் வியூகம் என்ன… வெற்றியால் த.வெ.க-வுக்கு கிடைக்கும் மைலேஜ் என்ன?” என விசாரித்தோம்.

ஆதவ்

இடைத்தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடனே, மதுராந்தகத்துக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவையும், தாராபுரத்துக்கு அமைச்சர் அருண் ராஜ்ஜையும் பொறுப்பாளராக நியமித்தார் முதல்வர் விஜய். அவர்களோடு தொகுதிக்கு மூன்று அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்கள், கட்சி நிர்வாகிகளும் இணைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். தொடக்கத்தில், ‘அசால்ட்டாக இரு தொகுதிகளையும் அடித்துத் தூக்கிவிடலாம்’ என்ற கணக்கோடுதான் களமிறங்கியது த.வெ.க. ஆனால், இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க., தி.மு.க-வினர் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று வேலைப் பார்ப்பதைப் புரிந்துக்கொண்டு, தங்களுடைய வியூகத்தை மாற்றினர்.

மொத்த அமைச்சரவையும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, திருச்சிக்கு தெற்கே உள்ள அமைச்சர்களும் கொங்கு ஏரியா அமைச்சர்களும் தாராபுரம் தொகுதிக்குப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். ஒவ்வொருவரிடமும் தலா 25 வார்டுகள் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது. அதோடு, அ.தி.மு.க-விலிருந்து த.வெ.க-வுக்கு வந்த உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட சீனியர்களும் கோதாவில் குதித்தனர். அதேபோல, மதுராந்தகத்திலும் இதர அமைச்சர்களுக்கு வார்டு பிரிக்கப்பட்டு பொறுப்பாக அளிக்கப்பட்டது.

செளமியா அன்புமணி

மதுராந்தகத்தைப் பொறுத்தவரை, போட்டியிலிருந்து பா.ம.க விலகிக் கொண்டது த.வெ.க-வுக்கு ரொம்பவும் சாதகமாகிப் போனது. வன்னியர் சமூகத்தின் வாக்குகளை வளைப்பதற்காக, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் ஆசிப் பெற்றார்கள் அமைச்சர்கள். அதோடு, ‘சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்’ என்று பேசி, பா.ம.க-வின் முழக்கத்தை தாங்களும் ஏற்பதாக சிக்னல் கொடுத்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா. ‘த.வெ.க அமைச்சரவையில் பா.ம.க இணையப் போகிறது. செளமியா அன்புமணி அமைச்சராகப் போகிறார்’ என்று தொகுதிக்குள் பரவிய தகவல், வன்னியர் சமூகத்தினர் மத்தியில் த.வெ.க சார்புநிலையை உருவாக்கியது. இதையெல்லாம் எதிர்கொள்ளும் அளவுக்கு தி.மு.க., அ.தி.மு.க-வினரிடம் வியூகமில்லை.

தாராபுரத்தில், தொடக்கத்திலிருந்த அந்தத் தொகுதி த.வெ.க-வுக்குச் சாதகமாக இல்லை. தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தினர், அ.தி.மு.க சார்புநிலையில் உறுதியுடன் இருப்பதாக, த.வெ.க நடத்திய நான்கு சர்வே முடிவுகளும் படம்பிடித்துக் காட்டின. ‘தொகுதியில் த.வெ.க வென்றுவிட்டால், பொறுப்பாளரான அருண்ராஜ்ஜின் கிராப் உயர்ந்துவிடும். கொங்கு பகுதியின் முகமாக அவர் மாறிவிடுவார். அதை அனுமதிக்கக் கூடாது…’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு, கட்சிக்குள்ளேயே சிலர் உள்ளடி வேலைகளும் பார்த்தனர். இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வாக்குச் சேகரிப்பில் தீவிரம் காட்டினார் அருண்ராஜ்.

தவெக அருண்ராஜ்
அருண்ராஜ்

குண்டடம், மூலனூர், தாராபுரம் என மூன்று ஒன்றியங்களும் தாராபுரம் டவுனும் தொகுதிக்குள் வருகிறது. அதில், குண்டடம் ஒன்றியம் அ.தி.மு.க பலமாக இருக்கும் பகுதி. மூலனூரில், முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சக்கரபாணியின் களப்பணியால், அ.தி.மு.க-வின் வாக்குகள் உடைந்தன. அதில் ஒரு பகுதியினர், ‘சத்தியபாமாவை பிடிக்காது. ஆனால், நம் தொகுதிக்கு தேவையானதை செய்வதாக அமைச்சர்கள் சொல்கிறார்களே… மாவட்ட பொறுப்பு அமைச்சரான அருண்ராஜ்ஜும் வாக்குறுதி அளித்திருக்கிறாரே…’ என்று த.வெ.க சார்பு நிலைக்கு மாறினார்கள். தாராபுரம் ஒன்றியத்திலும் டவுனிலும் த.வெ.க-வுக்கு வாக்குவங்கி பலமாக இருந்ததால், அங்கேயே அக்கட்சியின் கை ஓங்கியது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஒருமுறை பிரசாரம், ஒருமுறை ரோடு ஷோ என இரண்டு தொகுதிகளிலும் ரவுண்ட் வந்தார் முதல்வர் விஜய். டிராக்டர் ஓட்டுவது, டீ குடிப்பது, முருங்கைக்காய் பறிப்பது, ரேக்ளா வண்டியை ஓட்டுவது என மக்களைக் கவரும் பல விஷயங்களைச் செய்தார். மூலனூர் ஒன்றியத்திலுள்ள வஞ்சியம்மன் கோவிலில் முதல்வர் வழிபட்டதை, கவுண்டர் சமூகத்தினர் தங்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்த்தனர். இதனால்தான், கடைசி நேரத்தில் பல நியூட்ரல் வாக்குகள் த.வெ.க-வுக்குச் சாதகமாக மாறின. ‘நான் பிரசாரத்துக்குப் போனபிறகு எல்லாமே மாறும்’ என கட்சி சீனியர்களிடம் சொன்னதுபோல, சொல்லி அடித்திருக்கிறார் முதல்வர் விஜய்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.jpeg
விஜய்

தேர்தல் முடிவுகளில் இரண்டு தொகுதிகளையும் வென்றுக்காட்டி, முதல்வரின் இமேஜ்ஜை உயர்த்தியிருக்கிறது த.வெ.க. அடுத்தாக வரவிருக்கும் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கும் தயாராகும் உத்வேகத்தைப் பெற்றிருக்கிறார்கள். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து கட்சியை கட்டமைக்கும் பணி இனி வேகமெடுக்கும் என்கிறார்கள் த.வெ.க சீனியர்கள். ‘தாராபுரத்தில் சத்தியபாமா பிரசாரம் செய்ய முடியாமல் போனதுக்கு கட்டமைப்பு இல்லாததே காரணம். கிளைச் செயலாளர் இருந்திருந்தால், நம்மால் எளிதாக பிரசாரம் செய்திருக்க முடியும்’ என்று கட்சி சீனியர்கள் சொன்னதை புரிந்துக்கொண்டிருக்கிறார் முதல்வர் விஜய். ஆக, இந்த தேர்தல் வெற்றி த.வெ.க-வுக்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்திருப்பதுடன், கட்சியைக் கட்டமைப்பதற்கான பணிகளையும் வேகமெடுக்க வைத்திருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அமெரிக்கா கிரீன் கார்டு கட்டுப்பாடு: கவலைப்பட வேண்டுமா? இந்தியாவுக்கு காத்திருக்கும் வாய்ப்பு என்ன?

அமெரிக்காவின் தொழிலாளர் துறையானது காக்னிசன்ட், இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS),...

தவெக: 'சாதகமான இடைத்தேர்தல் முடிவுகள்' – கூட்டணி கணக்கில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் நடந்தத் தேர்தல்...

தாராபுரம்: ''நம்பிக்கைத் துரோகம், உள்ளடி வேலை'' – அதிமுக மூன்றாவது இடம் பிடித்த பின்னணி என்ன?

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மூன்றாவது இடத்துக்கு வந்து அதிர்ச்சி...

கூட்டணி பலமின்றி களமிறங்கிய திமுக; வாக்கு சதவிகிதம் ஓர் ஒப்பீடு; 3 ப்ளஸ்கள் என்னென்ன?

மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா என இடைத்தேர்தல் நடந்த இரண்டு...