17
September, 2026

A News 365Times Venture

17
Thursday
September, 2026

A News 365Times Venture

“இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம்" – ஜி.கே.வாசன்

Date:

“தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பதை நிர்வாகிகளுடன் ஆலோசித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல்

தருமபுரி மாவட்டம், அரூரில் நடந்த த.மா.கா நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தருமபுரியை வறட்சி மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

யு.பி.ஐ பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழகச் சட்டமன்றத்தில் சபாநாயகர் நேர்மையாகவும் நடுநிலையாகவும் செயல்படுகிறார்.

தமிழகத்தில் காவிரிப் படுகையில் 5 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அமெரிக்க நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதற்கு அனுமதி அளித்தால், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும். எனவே, இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.

ஜி.கே. வாசன்
ஜி.கே. வாசன்

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிக்கான இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை த.மா.கா தலைவர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசித்து உரிய நேரத்தில் அறிவிப்போம்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கான்ஃபெரன்ஸ் காலில் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம்: உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட மனோஜ் ஜராங்கே

மகாராஷ்டிராவில் பெரும்பான்மையாக வாழும் மராத்தா சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி...

US Fed வங்கியின் வட்டி விகித உயர்வை விரும்பாத ட்ரம்ப்; Upset-ல் பிற நாடுகளை குற்றம்சாட்டுவது என்ன?

நேற்று அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் 0.25% வட்டி விகித...

"ஒரு எம்பி பதவிக்காக திமுக உடன் கூட்டணி வைத்தார்கள்" – பிரேமலதாவுக்கு வன்னி அரசு பதிலடி

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு அமைச்சர் வன்னி அரசு பதிலடி கொடுத்திருக்கிறார். ...

லண்டன் பயணம்: “முதல்வர் விஜய் செய்தியாளர்களைச் சந்தித்து…" – டி.ஆர்.பி. ராஜா அடுக்கும் கேள்விகள்

முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்க்க லண்டன் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், லண்டன்...