21
September, 2026

A News 365Times Venture

21
Monday
September, 2026

A News 365Times Venture

'ஆரோக்கியமாகவும், உயிருடனும்' – கைலாசா அறிவிப்பு; KGF பி.ஜி.எம் உடன் என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா

Date:

நித்தியானந்தாவை சுற்றி சர்ச்சை ஓயவே ஓயாது போல. தொடர் வழக்குகளால் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா, ‘கைலாசா’ என்ற தனிநாட்டை உருவாக்கியுள்ளதாகவும், அங்கிருந்து பேசுவதாகவும் அடிக்கடி யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

ஆனால், இன்று வரை கைலாசா என்ற நாடு எங்கு இருக்கிறது என்பதும், நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதும் யாருக்கும் தெரியவில்லை. இவரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, நித்தியானந்தா இறந்துவிட்டதாக ஒரு தகவல் பரவியது. இந்தத் தகவல் குறித்து நித்யானந்தாவின் சகோதரி மகன், ‘இந்து தர்மத்தை காக்க நித்தியானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டார்’ என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

நித்தியானந்தா: கே.ஜி.எஃப் பி.ஜி.எம் வீடியோ

“பகவான் நித்யானந்த பரமசிவம் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், உயிருடனும், உத்வேகத்துடனும் இருப்பதாக கைலாஸா உறுதியாக அறிவிக்கிறது” என்று இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக கைலாசா வலைதள பக்கத்தில் நேற்று அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கையை அடுத்து, தற்போது கே.ஜி.எஃப் பட பி.ஜி.எம்முடன் ‘நான் வீழ்வேன் என நினைத்தாயோ?’ என்ற கேப்ஷனுடன் நித்யானந்தா வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ…


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'உட்கார கூட இடமில்ல…' – முதல்வர் விஜய் ஆய்வு செய்த எழும்பூர் மருத்துவமனையின் அவலநிலை என்ன?

சென்னை எழும்பூரில் உள்ள பழமையான மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய் சமீபத்தில்...

"முதல்வர் தனது வேலையைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகம்; கடலைப் பார்ப்பதற்கல்ல"- ஸ்டாலின் சாடல்

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, 110-வது விதியின் கீழ் ரூ.1,200 கோடி...

ஹார்முஸில் தொடங்கிய பிரச்னை: France-ல் பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு; இந்தியாவுக்கும் சிக்கல்?

ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல் உலக நாடுகளைக் கடுமையாகப் பாதித்து வருகிறது.ஹார்முஸ் நீர்ச்சந்தி...

தாராபுரம்: தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மக்கள், பாதியில் நிறுத்தப்பட்ட தேர்தல் பிரசாரம்!

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர்...