18
May, 2026

A News 365Times Venture

18
Monday
May, 2026

A News 365Times Venture

“ஆரவாரத்தால் அதிர போகும் சேப்பாக்கம்.!” – தோனியின் `Last' என்ட்ரியை  காண வரும் முதல்வர் விஜய்?

Date:

சேப்பாகத்தில்  இன்று நடைபெறும் சென்னை  சூப்பர் கிங்ஸ் – ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சேப்பாக்கம் மைதானமே கூடுதல் உற்சாகமாக இருக்கப்போகிறது. 

இந்தியாவில் நடந்துவரும் ஐ.பி.எல் தொடர் கிரிக்கெட் போட்டிகள் கிட்டதட்ட இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. குறிப்பாக, சென்னை சூப்பர்கிங்கஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமெனில், மீதம் உள்ள இரண்டு போட்டிகளிவுலும் வெற்றி கொள்ள வேண்டிய நெருக்கடியில் உள்ளது. சென்னை அணியில் முகமாக அறியப்படும் தோனி, இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் தொடர் போட்டிகள் எதிலும் பங்கேற்கவில்லை. இன்று நடைபெறும் ஹைதராபாத் சன்ரைசஸ் அணியுடனான போட்டியில் அவர் களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது. நடப்பு தொடரில் சென்னை மைதானத்தில் நடைபெற உள்ள கடைசி போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது

தோனி – விஜய்

சேப்பாக்கத்தில் குவியும் சென்னை அணியின் ரசிகர்களுக்கு தோனியின் வருகை பெருத்த உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஏற்கனவே தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகிவந்த நிலையில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் அவர் பங்கேற்று விளையாடிய பிறகு, தனது ஓய்வு முடிவையும் அறிக்கப்பட உள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தரப்பிலிருந்து செய்திகள் கசிந்துள்ளது. 

இந்நிலையில், இன்று நடைபெறும் ஆட்டமே தோனியின் கடைசி ஆட்டமாக இருக்கலாம் என்கிற தகவல் முதல்வர் அலுவலகம் வரை எட்டியது. இதனால் இன்று நடைபெறும் போட்டியை நேரடியாக கண்டுகளிக்க முதல்வர் விஜய் விரும்பியிருக்கிறார். அவருடன் அவர் அமைச்சரவை சகாக்களும் இந்த போட்டியை காண விரும்புகிறார்கள்.

இதனால், வி.ஐ.பி கேலரியில் உள்ள மொத்த டிக்கெட்களையும் முதல்வர் அலுவலகம் தரப்பே வாங்கியுள்ளதாம். ஏற்கனவே மைதானத்தில் தோனி இறங்கினால், விண்ணை முட்டும் அளவுக்கு சத்தம் எழும். இப்போது முதல்வர் விஜய்யும் இந்த போட்டியை கண்டுகளிக்க வந்தால், சேப்பாக்கம் மைதானமே ஆரவாரத்தினால் அதிரும் என்கிறார்கள். 

முதல்வர் இந்த போட்டியை காணும் சூழ்நிலை இருப்பதால், பாதுகாப்பு வசதிகளையும் பலப்படுத்த சொல்லியுள்ளது காவல்துறை.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

PM SHRI திட்டம்: “தமிழ்நாடு அரசு, மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவா?" – அமைச்சர் ராஜ் மோகன் விளக்கம்!

தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) மும்மொழிக் கொள்கை போன்ற அம்சங்களை...

'இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லையா?' – நெதர்லாந்து பிரதமருக்கு இந்தியா தக்க பதில்

இந்திய பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே,...

மே 17 நினைவேந்தல்: `இனப்படுகொலைக்கு நீதி கேட்டு அழுத்தம் தர வேண்டும்' – திருமுருகன் காந்தி

2009, மே மாதம் 17,18,19 ஆகிய தேதிகளில் ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் ...

`கிலுகிலுப்பை ஆட்டி விளையாட்டு காட்டும் ஆளைப் பார்த்து குழந்தை நிச்சயம் மயங்கும்; ஆனா.!” – உதயநிதி

திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி கே.கலைவாணன் இல்லத் திருமண விழா தஞ்சாவூரில் நடைபெற்றது....