17
November, 2026

A News 365Times Venture

17
Tuesday
November, 2026

A News 365Times Venture

`ஆட்டம் போடலாம்னு நினைச்சா.!' – விஜய் சொல்லுக்கு கட்டுப்பட மறுக்கிறார்களா தவெகவினர்?

Date:

இருபெரும் திராவிடக் கட்சிகளை வீழ்த்தி அறுபதாண்டு தமிழக அரசியலை மாற்றி ஆட்சி பீடத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் அமர்ந்து ஆறு மாதங்கள் கடந்திருக்கின்றன.

விஜய் என்ற ஒரு முகத்துக்காக வாக்களித்த தமிழக மக்களுக்கு இந்த ஆறு மாதம் எப்படி நகர்ந்தது? ஏதேனும் அசௌகரியத்தைச் சந்தித்தார்களா அவர்கள்?

‘புகாருக்கு ஆளான தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் குறித்த விவரம் கிடைக்குமா’ என சாட் ஜி பி யிடம் கேட்டால் கூட, வந்து விழுந்த பட்டியலில் எண்ணிக்கை டஜனைத் தாண்டி விட்டது.

அருள் விக்னேஷ்

கிறிஸ்டோபர் – குமரி மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர்

சசிகுமார் – அரக்கோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர்

பிரகாஷ் என்ற குட்டி – திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளர்

ரமேஷ் – குளித்தலை ஒன்றியச் செயலாளர்

விஜய் மோகன் – ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர்

வேம்புலி – ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர்

மதன் ராஜ் – வில்லிவாக்கம் பகுதி துணைச் செயலாளர்

பாம்பு தினேஷ் – சென்னை ஆர் கே நகர் 43 வது வார்டு பொறுப்பாளர்

ஆனந்த் – சென்னை அசோக் நகர் நிர்வாகி

கண்ணன் – மதுரை கீழ்மாத்தூர் நிர்வாகி

பிரைடர், ரூஸ்வெல்ட் – சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள்

என்ற இந்த 12 பேர் மீது காவல் நிலையத்தில் வழக்குகளும் பதிவாகி இருக்கின்றனவாம்.

மாவட்டச் செயலாளர் மீது பாலியல் புகார்

இவர்கள் தவிர திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது புகார் கொடுத்த பெண் புகாரைத் திரும்ப பெற்றுக் கொண்டதாகச் சொல்லப்பட்டது.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டும் இன்னும் அடங்கியபாடில்லை.

பெண்களின் பாதுகாப்புக்கென ‘சிங்கப் பெண்’ சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கிய முதல்வரின் இந்தச் சொந்தக் கட்சியினர் மீது என்ன நடவடிக்கை எடுத்தார் என எதிர்க்கட்சிகள் இல்லை, கட்சி சார்பற்ற பொது மக்களே கேட்கிறார்கள்.

பதில் முதல்வர்தான் சொல்ல வேண்டும்.!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை

பெண்களுக்கெதிரான இந்த தொந்தரவுகள் தாண்டி, மனு கொடுக்க வந்தவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் அடித்ததாக எழுந்த புகார், நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன், மெத்தம்பெட்டமைன் கடத்தலில் புகாரில் கைது செய்யப்பட்டது, அந்தச் செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளர்களை அவரது ஆதரவாளர்கள் மிரட்டியது என நீண்டு கொண்டே போகிறது வம்புகளின் பட்டியல்.

முதல்வரின் பாஷையில் சொல்ல வேண்டுமானால் வாட்ஸ் ப்ரோ , இட்ஸ் ராங் ப்ரோ என்றுதான் சொல்ல வேண்டும்.

இனியும் இந்த போக்கு தொடர்ந்தால், நீங்கள் நிகழ்த்திய வரலாற்றுச் சாதனையை துயர சம்பவமாக தமிழக மக்களை நினைக்க வைத்து விடுவார்கள் இவர்கள்.

விழித்துக் கொள்ளுங்கள் முதல்வரே

இந்த இடத்தில் ‘சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என நீங்கள் பதவி ஏற்ற போது பேசிய சில வார்த்தைகளை நினைவு கூர்வது ரொம்பவே அவசியமானதாகப் படுகிறது.

‘பவர் வந்திடுச்சுனு யாராவது ஆட்டம் போடலாம்னு நினைக்காதீங்க. இங்க என் தலைமையிலான ஒரே பவர் தான்’ என்பதுதான் அந்த வார்த்தைகள்.

‘கட்சிக்காரங்களுக்கு தான் இது’ என அன்று உற்சாகத்துடன் கை தட்டினர் தமிழக மக்கள்.

இப்போது எல்லோருக்கும் எழும் கேள்வி, முதல்வரின், தலைவரின் பேச்சை தவெகவினரே கேட்க மாட்டார்களோ?’ என்பதுதான்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"குதிரை பேரத்திற்கு ஒப்புதல் வாக்குமூலம்" – 'விரைவில் திமுக ஆட்சி' என்ற ஸ்டாலினுக்கு அருண்ராஜ் பதில்

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத் திருமணவிழாவை நேற்று நடத்தி வைத்து...

"அவர் அப்போது என் காதலி; இப்போது என் தோழி!" – காதல் நினைவுகளைப் பகிர்ந்த ராகுல் காந்தி

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது தாயார் சோனியா காந்தியின்...

“தவெக ஆட்சியில் விசிக அமைச்சரும் Reels எடுத்தே தீர வேண்டுமா?" – டிடிவி தினகரன் கேள்வி!

நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் நவம்பா் 10-ம் தேதி நலத்திட்ட உதவி...

தலித் + இஸ்லாமியர் = 40% வாக்குகள்; சவாலான களத்தில் பாஜக எப்படி வெல்கிறது? | UP Election Explained

2027-ல் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குள்...