தமிழகத்தின் முதல்வராக விஜய் தேர்தெடுக்கபடுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்துவருகிறது.
போதிய பெரும்பான்மை இல்லாமல் த.வெ.க அல்லோலப்பட்டு வரும் நிலையில், தமிழக ஆளுநர் அலுவலகத்திலிருந்து ரிப்போர்ட் ஒன்று ரெடியாகியுள்ளது.
த.வெ.க தலைவர் விஜய் நேற்று இரவு ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து தங்கள் கட்சிக்கு போதிய பெரும்பான்மை இருப்பதாக கடிதம் வழங்கினார்.
அந்த கடிதத்தில் த.வெ.க, காங்கிரஸ், சி.பி.ஐ,சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு கடிதத்தோடு அ.ம.மு.க-வை சேரந்த சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜ் ஆதரவு கடிதமும் இருந்துள்ளது.
த.வெ.க கொடுத்த ஆதரவு கடிதங்கள் விவரங்களை டெல்லிக்கு விவரமாக சொல்லியிருக்கிறார் அர்லேக்கர். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியின் ஆதரவும் த.வெ.க-வுக்கு கிடைத்துள்ளதை ஆளுநர் சொல்லியிருக்கிறார்.
இதை அறிந்த டெல்லி மேலிடம் கடும் டென்சனாகிவிட்டது. உடனடியாக தினகரனை தொடர்பு கொண்டு, என்ன நடந்து என கேட்டனர். அவர் தனது எம்.எல்.ஏ எஸ்.காமராஜ் ஏற்கனவே தன்னிடம் ஆதரவு கடிதம் கொடுத்துவிட்டதாக சொல்லியிருக்கிறார்.
அந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு உடனடியாக ஆளுநரை சந்திக்க சொல்ல, அவசர அவசரமாக ஆளுநர் அலுவலகத்தி்ற்கு வந்தார். அங்கு ஆளுநரை சந்தித்து தனது எம்.எல்.ஏ-வை விலை பேசியிருப்பதையும்,குதிரை பேரம் நடப்பதையும் புகாராக சொல்லிவிட்டார்.
அதன்பிறகு எஸ்.காமராஜ் தினகரன் லைனுக்கு வந்துவிட்டார். தினகரன் எஸ்.காமராஜ் இருவருமே நள்ளிரவு ஆளுநரை சந்தி்த்து விளக்கம் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் ஆளுநர் கொடுத்த ஆலோசனையின்படி கிண்டி காவல்நிலையத்தில் இதுகுறித்து புகாரும் கொடுத்திருக்கிறார்கள். இந்த விவரங்களை எல்லாம், இரவோடு இரவாக ஆளுநர் ரிப்போர்ட்டாக ரெடி செய்துவிட்டார்.
இன்று காலை மேற்கு வங்கத்தில் நடந்த முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு அமித்ஷா சென்றுவிட்டு, மதியம் டெல்லி திரும்ப உள்ளார். அதன்பிறகு தமிழக ஆளுநர் அர்லேக்கர், அமித்ஷாவிடம் இந்த ரிப்போர்ட்டை அனுப்ப உள்ளார்.
அந்த ரிப்போர்ட் அடிப்படையில் தான் தமிழகத்தில் புதிய அரசு பதியேற்பதற்கான சாத்திய கூறுகள் அமையும் என்கிறார்கள். குதிரை பேரம் நடந்தது உறுதியானால், தமிழகத்தில் தேர்வான எம்.எல்.ஏக்களை சஸ்பெண்ட் செய்து வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. டெல்லி தலைமையும் அந்த மூடுக்கே வந்துள்ளார்கள். அமித் ஷாவின் சிக்னலுக்காக மட்டுமே இப்போது ஆளுநர் காத்திருக்கிறார் என்கிறார்கள்..




